வேண்டாம்னு சொன்ன பிறகும்..! பக்கத்தில் வந்து வெட்கமே இல்லாமல்..! முன்னாள் முதல்வரின் மகளுக்கு நேர்ந்த விபரீத அனுபவம்!

மும்பை தாதர் ரயில்வே நிலையத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மராட்டிய மாநில முன்னாள் முதலமைச்சருமான சரத்பவாரின் மகளும் எம்.பியான சுப்ரியா சுலேவை வாடகை கார் ஓட்டுநர் ஒருவர் தொந்தரவு செய்ததாக அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


மும்பையின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவாரின் மகளான சுப்ரியா சுலே தாதர் ரயில்வே நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த நிலையில் அவரை வழிமறித்த வாடகை கார் ஓட்டுநர் ஒருவர் வாடகைக்கு கார் வேண்டுமா எனக் கேட்டுள்ளார். இந்நிலையில் அதற்கு வேண்டாம் என பதில் அளித்தவர் சுப்ரியாவை அந்த கார் ஓட்டுனர் விடாமல் பின்தொடர்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவரிடம் புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் முயற்சி செய்துள்ளார்.இந்நிலையில் ஆத்திரமடைந்த சுப்ரியா இதுகுறித்து அங்கிருந்த ரயில்வே காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.இதையடுத்து கார் ஓட்டுநரான குல்ஜித் சிங் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவர் மீது வழக்கு போட்டுள்ளனர்.  

இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் சுப்ரியா வாடகை கார் ஓட்டுநரின் நடத்தை குறித்த ட்விட் செய்துள்ளார். தான் வாடகை கார் வேண்டாம் என மறுத்த போதிலும் அந்த கார் ஓட்டுநர் தன்னைப் பின் தொடர்ந்து வந்ததாகவும் தன்னுடன் நெருங்கி நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள முயற்சித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மற்றும் இது பற்றி பியூஸ் கோயலிடம் ட்விட்டர் மூலம் உரையாடிய சுப்ரியா ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் இந்த மாதிரியான ஆட்டோ மற்றும் கார் அவர்களை ஏன் அனுமதிக்கிறீர்கள்? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு போலீஸ் அதிகாரிகள் அந்த கார் ஓட்டுநர் மீது சீருடை இல்லாமை மற்றும் முறையான டிக்கெட் பாஸ் இல்லாமல் வாடகை கார் ஓட்டியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வரும் காலங்களில் இந்த மாதிரியான சம்பவங்கள் நிகழாமல் கண்காணித்துக்கொள்வோம் என ரயில் நிலைய காவல் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.