என்ன நகை எல்லாம் பொல பொலனு உதிருது...! மிரட்டிய 9 பேர் கும்பல்! நடுநடுங்கி சரவணா ஸ்டோர் உரிமையாளர் செய்த செயல்! சென்னை அதிர்ச்சி!

சென்னை தி.நகரில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளரிடம் துப்பாக்கி முனையில் 1 கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை தி.நகர் பகுதிகளில் மக்கள் கூட்டம் சற்று அதிகமாகவே இருக்கும் இந்நிலையில் அப்பகுதியில் துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் அதிகமாக உள்ளதால் பெருமளவு மக்கள் கூட்டம் இருக்கும். இந்நிலையில் பிரபல நகைக்கடை ஒன்றில் துப்பாக்கி முனையில் 15 பேர் கொண்ட கும்பல் நகைக்கடை உரிமையாளரிடம் ரூபாய் 1 கோடி கேட்டு மிரட்டியுள்ளனர். இதையடுத்து மிரட்டியகும்பலை சேர்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தி.நகர் உஸ்மான் ரோடு பகுதியில் சொந்தமாக நகைக்கடை நடத்தி வருபவர் சிவ அருள்துரை ,இவரது கடைக்கு ஒரு கும்பல் கடந்த 3 ஆம் தேதி நகை வாங்குவதற்காக வந்துள்ளனர். அப்போது கடை முழுவதையும் சுற்றிப் பார்த்துவிட்டு 3 பவுன் செயின் மட்டுமே வாங்கியுள்ளனர். இதையடுத்து கடையில் உள்ளவர்கள் அசந்த நேரத்தில் தங்கத்தின் மீது ஒரு பவுடரை தூவிவிட்டு இது போலி நகை என தகராறு செய்துள்ளனர். இந்நிலையில் அதிர்ச்சியடைந்த கடையின் உரிமையாளர் மற்றும் கடையில் வேலை பார்ப்பவர்கள் உடனே ஒன்று கூடினர்.

உங்களது கடையில் போலி நகை விற்பனை செய்கிறீர்கள் என பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் தெரிவித்து விடுவோம் என மிரட்டிள்ளனர். இதையடுத்து அந்த கும்பல் சுமார் 15 லட்சம் வரை கடை உரிமையாளரிடம் கேட்டுள்ளனர். இதையடுத்து அவரும் ஒப்புக்கொண்டு சுமார் 15 லட்சம் ரூபாயை அவர்களிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து மீண்டும் அந்த கும்பல் நேற்று மாலை 5 மணி அளவில் அதை நகைக் கடைக்குள் நுழைந்துள்ளனர்.

பின்னர் கடை உரிமையாளரிடம் நீங்கள் கொடுத்த 15 லட்சம் ரூபாய் போதாது மேலும் 1 கோடி ரூபாய் வேண்டும் என மிரட்டியுள்ளனர். இதையடுத்து அந்த கும்பலில் ஒருவர் துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் கேட்டுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து மாம்பலம் காவல்துறையினருக்கு சிவ அருள்துரை ரகசியமாக தகவல் தெரிவித்துள்ளார்.இதையடுத்து காவல்துறையினர் கடைக்குள் நுழைந்தபோது அங்கு சுமார் 15 பேர் கொண்ட கும்பல் கடை உரிமையாளரை மிரட்டிய இந்நிலையில் இறுந்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் வருவதை அறிந்து அந்த கும்பல் அங்கிருந்து தெறித்து ஓட ஆரம்பித்தனர்.

இதையடுத்து அந்த கும்பலில் உள்ள 9 நபர்களை மட்டுமே காவல்துறையினர் கையும் களவுமாக கைது செய்துள்ளனர். இதையடுத்து அவர்களின் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.இதில் இந்த கும்பலை சேர்ந்த தனசேகர் என்பவரிடம் போலியான காவலர் அடையாள அட்டையும் மற்றும் 4 பத்திரிகையாளர் அட்டையும் இருந்தது. ஜீவா என்பவர் துப்பாக்கி வைத்துள்ளார். இதையடுத்து அதை அனைத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 

நிலையில் மற்றும் நபர்கள் தனசேகரன் திருவேற்காட்டை சேர்ந்தவர். ஜீவா வடபழனியை சேர்ந்தவர்.

புதுப்பேட்டையை சேர்ந்த செய்யது அபுதாகிர், அமானுல்லா, எண்ணூரை சேர்ந்த ஜெகதீசன், கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த முருகன், திருவல்லிக்கேணியை சேர்ந்த திருமால், பல்லாவரத்தை சேர்ந்த தண்டபாணி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து பகல் நேரத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள பகுதிகளில் இந்த மாதிரியாக கொள்ளைச் சம்பவம் நடைபெறுவது அனைவரிடமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.