பேஸ்புக்கில் வெளியிட்ட விபரீத வீடியோ! பிரபல நடிகையை கைது செய்து போலீஸ் அதிரடி! அதிர்ச்சி காரணம்!

டெல்லி: நடிகை பயல் ரோஹத்கியை ராஜஸ்தான் போலீசார் கைது செய்தனர்.


சுதந்திரப் போராட்ட வீரர்களாகக் கருதப்படுவோரும் இந்தியாவின் முதன்மை அரசியல் குடும்பமாகவும் உள்ள ஜவஹர்லால் நேருவின் மனைவி கமலா நேரு மற்றும் தந்தை மோதிலால் நேரு ஆகியோரை தரக்குறைவான முறையில் விமர்சித்து ஒரு வீடியோவை சமீபத்தில் நடிகை பயல் ரோஹத்கி வெளியிட்டிருந்தார்.

மேலும், லால் பகதுர் சாஸ்திரி மரணம் தொடர்பாக சில ஆட்சேபகரமான கருத்துகளையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த வீடியோவுக்கு தேவையான உள்ளடக்க தகவல்களை கூகுளில் இருந்து எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இதன்பேரில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சர்மேஷ் சர்மா ராஜஸ்தான் போலீசில் புகார் செய்தார்.  

இதையடுத்து, பயல் ரோஹத்கி மீது தகவல் தொடர்பை தவறாக பயன்படுத்தியதாகக் கூறி போலீசார் வழக்குப் பதிந்தனர். இதற்கிடையே பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியதால், பயல் ரோஹத்கி தனது கருத்திற்கு மன்னிப்பு கோரினார். ஆனாலும், அவரை விடாமல் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

இதனை அவரே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் கருத்துரிமை என்பது கிடையாது எனவும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். பயல் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.