நான் யார் தெரியுமா? போதையில் போலீசிடம் ரவுசு..! திமுக ஐடி விங் நிர்வாகியை அலேக்காக தூக்கிய அதிகாரிகள்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட திமுக பிரமுகர் உட்பட அவரது நண்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த இருவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்திள்ளனர்.இதையடுத்து அவர்களிடம் ஆவணம் கேட்டுள்ளனர் அப்போது அவர்கள் இருவரும் குடிபோதையில் இருந்ததால் காவல்துறையினர் அவர்களை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர்.

இதையடுத்து இருவரும் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்களின் வாகனத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். பிறகு வழக்கு பதிவு செய்ய முயன்ற காவல்துறையினருடன் அந்த நபர்கள் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து அவரது ஆவணங்களை வாங்கி பார்த்தபோது தகராறில் ஈடுபட்டது குடியாத்தம் சட்டமன்ற தொகுதி தி மு க தகவல் தொழில் நுட்பப்பிரிவு ஒருங்கிணைப்பாளரான ஞானபிரகாசம் மற்றும் அவரது நண்பர் ரோஷன் என்பது தெரியவந்தது.  இந்நிலையில் அவர்கள் மீது காவல்துறையினர் 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.