கர்ப்பத்தை கலைச்சிரு! மறுத்த இளம் பெண்! மாமா உறவு நபர் செய்த கொடூரம்! பதைபதைக்க வைக்கும் சம்பவம்!

கர்நாடக மாநிலத்தில் தந்தையுடன் பிறந்த அத்தை கணவருடன் தவறான உறவு வைத்திருந்த பெண் கொலை செய்யப்பட்டார்.


பெங்களூரில் இருந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சற்று தொலைவில் சென்ன ராயப்பட்டணா என்ற இடம் உள்ளது. இங்குள்ள தென்னந் தோப்பு ஒன்றில் இளம் பெண் ஒருவரின் சடலம் கிடந்தது.

அந்த பெண்ணின் அடையாளம் தெரியாததால் சடலத்தை புகைப்படமாக எடுத்து ஊடகங்களில் வெளியிட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பெங்களூரைச் சேர்ந்த ஒருவர் அந்தப் பெண் தன்னுடைய மகள் தான் எனத் தெரிவித்தார்.

இதையடுத்து அந்தப் பெண்ணின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தபோது அவர் தனது அத்தை; அதாவது தந்தையின் தங்கையின் கணவரான சீனிவாஸ் என்பவரிடம் அடிக்கடி பேசியது தெரியவந்தது. இதையடுத்து சீனிவாஸிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது எனக்கு எதுவும் தெரியாது என அந்த நபர் கூறியதை போலீசார் நம்பவில்லை தொடர்ந்து போலீசாரின் விசாரணையில் அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்த நிலையில் அவருக்கு காவல்துறை மரியாதைகளைச் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது பல உண்மைகள் வெளியே வந்தன.

தனக்கும் அந்தப் பெண்ணுக்கும் தவறான தொடர்பு இருந்ததாகவும் அதன் மூலம் அந்தப் பெண் கருவுற்றதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்ததாக அவர் கூறினார்.

இதையடுத்து அந்தப் பெண்ணை சென்னராயப்பட்டணாவுக்கு வரவழைத்து கருவைக் கலைத்துவிடுமாறு வற்புறுத்தியதாகவும், அதற்கு மறுத்து அந்தப் பெண் தகராறில் ஈடுபட்டதால் அந்தப் பெண்ணை கொலை செய்து சடலத்தை அங்கேயே போட்டு விட்டு தப்பி சென்றதாக கூறினார். இதையடுத்து சீனிவாஸை போலீசார் கைது செய்துள்ளனர்