சிகிச்சையில் டாக்டர் மோசடி! ஆனால் டாக்டரின் மனைவிக்கு நோயாளியால் ஏற்பட்ட விபரீதம்! அதிர வைக்கும் சம்பவம்!

இந்தூர்: டாக்டரின் மனைவியை அடித்துக் கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


மத்தியப் பிரதேச மாநிலம், மால்வா மில் பகுதியை சேர்ந்தவர் டாக்டர் வர்மா. இவர், கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று (வியாழன்) காலை வர்மா, ஒரு வேலை நிமித்தமாக, வெளியூர் சென்றுவிட்டார். அவரது மனைவி லதா, கிளினிக்கை பார்த்து வந்திருக்கிறார். உடன் துணைக்கு, அவரது மகன் அபிஷேக் (19 வயது) இருந்துள்ளான்.   

கிளினிக் திறந்த சில மணிநேரத்தில் ரஃபிக் என்ற நபர் சிகிச்சைக்காக, அங்கு வந்துள்ளார். டாக்டர் வர தாமதமாகும் என்று லதா கூறியுள்ளார். இதில், அந்த நபர் ஆத்திரமடைந்து, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில், திடீரென கத்தியால் லதாவை அந்த நபர் குத்திக் கொன்றார். தடுக்கச் சென்ற அபிஷேக்கையும் கத்தியால் குத்திவிட்டு , அந்த நபர் தப்பியோடியுள்ளார். 

இதுபற்றி தகவல் கிடைத்ததும், விரைந்து வந்த போலீசார், ரஃபிக்கை கைது செய்தனர். என்ன காரணத்திற்காக, அவர் இந்த கொலையை செய்தார் என, தீவிரமாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.