ரயிலில் இளம் பெண் தனிமை பயணம்! அருகே சென்று இளைஞன் சுய இன்பம்! பிறகு நேர்ந்த விபரீதம்!

மெட்ரோ ரயிலில் சென்ற பெண்ணிடம் ஆபாச சைகை காட்டிய நபர் கைது செய்யப்பட்டார்.


டெல்லி மெட்ரோ ரயிலில் பெண் ஒருவர் வியாழக்கிழமை பயணித்துள்ளார். அப்போது, ரயில் இஃப்கோ சவுக் பகுதியில் இருந்து ஹூடா சிட்டி சென்டர்  நோக்கிச்சென்றபோது, அந்த பெண்ணின் அருகே இருந்த ஆண் ஒருவர் ஆபாசமான வகையில் சைகை காட்டியுள்ளார். 

இதனை அந்த பெண்மணி பார்க்காதது போல் அமர்ந்துள்ளார். இதனை அடுத்து அந்த இளைஞன் அந்த பெண்மணிக்கு அருகே சென்று சுய இன்பம் செய்ய ஆரம்பித்துள்ளான்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பெண், குர்கான் சென்றடைந்ததும் போலீசாரிடம் புகார் அளித்தார். சிசிடிவி கேமிரா காட்சிகளின் அடிப்படையில் குறிப்பிட்ட நபரை போலீசார் அடையாளம் கண்டறிந்து, கைது செய்துள்ளனர். 

ஹரியானா மாநிலம், சார்க்கி தாத்ரி மாவட்டத்தைச் சேர்ந்த நிதின் என்ற அந்த நபர் இதுபோல பெண் பயணிகளிடம் அவ்வப்போது சில்மிஷம் செய்து வந்ததாக, விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர் மீது பொது இடத்தில் ஆபாச சைகை செய்த பிரிவில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, போலீசார் தெரிவிக்கின்றனர்.