சொகுசு காரில் வலம் வந்து பட்டுப் புடவைகள் மட்டுமே கொள்ளை! நூதன கும்பல் சிக்கியது!

தமிழ்நாட்டில் பல இடங்களில் பட்டுப்புடவை திருடி வந்த ஆந்திர கும்பலை சென்னை திருமங்கலம் போலீசார் கைது செய்தனர்.


நேற்று மாலை சென்னை பாடி பாலம் திருமங்கலம் காவல் துறையினர் வாகன சோதனை ஈடுபடும்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி பார்த்ததில் காருக்குள் 3 பெண்கள் ஒரு ஆண் இருந்தனர்.இவர்களை விசாரணை செய்ததில் தமிழ்நாட்டில் காரில் உலா வந்து பட்டுப் புடவைகள் திருடும் ஆந்திரா கும்பல் என்று தெரியவந்தது.

ஆந்திரா சேர்ந்த கனகதுர்கா வயது 60 , நாகமணி வயது 35 , மேனா வயது 19 , பாலு மாகேந்திரா வயது 40 ஆகியோரை கைது செய்து விசாரணை செய்ததில் திடுக்கிடும் தகவல் வெளிவந்தது.சேலம்  மாவட்டத்தில்  ஒரு துணிக்கடையில் பட்டுப் புடவைகள் திருடியுள்ளனர். 

அதைத் தொடர்ந்து  2018 ம் ஆண்டில் சென்னை அண்ணா நகரில் இரண்டு துணிக்கடைகளில் 7 லட்சம் மதிப்புள்ள பட்டுப் புடவைகள் திருடியுள்ளனர்.2019 ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள துணிக்கடையில் 5 லட்சம் மதிப்புள்ள பட்டுப் புடவைகள் திருடி சென்றனர்.2019 ம் ஆண்டு பிரவரி மாதம் அசோக் நகர் சேர்ந்த கோபால் வயது 44 இவர் அதே பகுதியில் துணிகடை வைத்துள்ளார்.14ம் தேதி அன்று துணிகடை ஊழிரை திசை திருப்பி 1,50 லட்சம் மதிப்புள்ள 16 பட்டுபுடவைகளை திருடி சென்றனர்.

சென்னை திருமங்கலம் சேர்ந்த அவந்திகா துணி கடையில் 8 லட்சம் மதிப்புள்ள 30 பட்டுபுடவைகள் திருடி சென்றனர்.இவர்களிடம் இருந்து ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.வழக்கு பதிவு செய்த திருமங்கலம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறைச்சாலையில் அடைத்தனர்.மேலும் இவர்களுடைய முக்கிய குற்றவாளி தலைமறைவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவரை பிடித்தாள் தமிழ்நாட்டில் எந்தெந்த இடத்தில் பட்டுப் புடவைகள் திருடினார்கள் என்று தெரியவரும்.பட்டுப் புடவைகள் திருடும் ஆந்திரா கும்பலை கைது செய்த திருமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் வேல் முருகனுக்கு கமிஷனர் விஸ்வநாதன் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.