ரத்தத்தில் காதல் கடிதம் எழுதிய மாணவி! கண்டுபிடித்த பெற்றோர்! பிறகு காதலனுக்கு நேர்ந்த விபரீதம்!

சென்னை: ரத்தத்தில் காதல் கடிதம் எழுதிய காதலனும், அவனது நண்பனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இது ஒரு என்ஜீனியரிங் மாணவர்களின் உருக்கமான காதல் கதை. கதைப்படி, வேளச்சேரி பகுதியை சேர்ந்த என்ஜீனியரிங் மாணவர்கள் ஸ்ரீநாத் (20), யோகேஷ் (19) நெருங்கிய நண்பர்கள் ஆவர். இவர்கள் 2 பேரும் சென்னையின் அருகே உள்ள பிரபலமான என்ஜீனியரிங் கல்லூரியில் படித்து வருகின்றனர். இதில், ஸ்ரீநாத் தன்னுடன் பள்ளியில் ஒன்றாக படித்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

அந்த பெண் ஸ்ரீநாத்தின் காதலை ஏற்றுக் கொண்டதோடு, அடிக்கடி அவருடன் வெளியில் ஊர் சுற்றவும் தைரியமாக வந்துசென்றுள்ளார். இந்நிலையில், பெண்ணின் வீட்டாருக்கு இந்த சம்பவம் தெரியவரவே, அவர்கள், ஸ்ரீநாத்தை மறக்கும்படி, அந்த பெண்ணை வற்புறுத்தியுள்ளனர். ஆனால், அவர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுதவிர, ஸ்ரீநாத் அந்த பெண்ணுக்கு, ரத்தத்தில் காதல் கடிதம் எழுதியுள்ளார். இது பெண் வீட்டாரின் கையில் சிக்கியுள்ளது.

இதன்பேரில், கட்டாயப்படுத்தி, அந்த பெண்ணை, மடிப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஸ்ரீநாத் மீது புகார் தரும்படி, பெண்ணின் பெற்றோர் செய்துள்ளனர். அவரும் புகார் அளிக்கவே, போலீசார் இருதரப்பினரையும் அழைத்து, விசாரணை நடத்தி, சமரசம் செய்துவைக்கமுயன்றுள்ளனர். ஆனால், குறிப்பிட்ட பெண்ணுக்கு மைனர் வயது என்பதால், அவரது பெற்றோர் பிடிவாதம் காட்டவே, வேறு வழியின்றி, ஸ்ரீநாத், அவரது நண்பன் யோகேஷ் இருவரையும் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.