ஓயாமல் உல்லாசத்துக்கு அழைத்த திருநங்கை! காதலன் அரங்கேற்றிய கொடூரம்!

திருநங்கையை கொன்றதாக அவருடன் உறவில் இருந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.


தானேயை அடுத்த கல்யாண் நகரைச் சேந்த்த 38 வயது திருநங்கையான தீரஜ் சால்வே என்ற ரேவா தேசாய் குடியிருந்த வீட்டில் தாழிட்ட அறையில் இருந்து மோசமான நாற்றம் வீசியதையடுத்து வீட்டு உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

போலீசார் வந்து கதவை உடைத்துப்பார்த்தபோது அழுகிய நிலையில் தீரஜ் சால்வேயின்  சடலம் உடல் முழுவதும் கத்திக் குத்துக் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட போது சுஷில் பாலேராவ் என்ற இளைஞர் தீரஜுடன் உறவில் இருந்தது தெரிய வந்தது. 

தீரஜின் நம்பகத் தன்மையில் சந்தேகப்பட்டு சுஷில் அடிக்கடி சந்தேகப்பட்டு சண்டையிட்டு வந்ததும் தெரியவந்தது. இந்நிலையில் தீரஜின் உடலில் 40 கத்திக் குத்துக் காயங்கள் இருந்ததாகத் தெரிவித்த போலீசார் தீரஜை சுஷில் தான் கொன்றிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்ரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறினர். 

ஓயாமல் உறவுக்கு அழைத்த காரணத்தினாலும் திருநங்கை உடனான உறவை முறித்துக் கொள்ள முடியாததாலும் தீரஜ் கொலை செய்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.