உதயநிதியைப் போலவே தி.மு.க. நிர்வாகிகளும் மிரட்டத் தொடங்கிட்டாங்களே… அதிர்ச்சியில் மக்கள்.

இன்னும் ஆறு மாதத்தில் நாங்கள் ஆட்சிக்கு வருவோம், அப்போது பார்த்துக்கொள்கிறோம் என்று காவல் துறை உயர் அதிகாரிக்கு வெளிப்படையாகவே எச்சரிக்கை கொடுத்தார் உதயநிதி.


அவர் பாணியில் தி.மு.க. நிர்வாகிகளும் அரசு அதிகாரிகளை வெளிப்படையாக மிரட்டத் தொடங்கியுள்ளனார். ஆம், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திமுக கிழக்கு மாவட்டம் சார்பில் பொது உறுப்பினர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் டிஜே கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட பொறுப்பாளர் கோவிந்தராஜன், திமுக ஆட்சிக்கு வந்தால் வட்டாட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலர், காவல்துறை டிஎஸ்பி என அனைவரையும் நாம்தான் நியமிப்போம்.. காவல்துறை தற்போது பயந்து கொண்டிருக்கிறது . திமுக ஆட்சிக்கு வந்தால் அரசை நாம்தான் நடத்துவோம் பல்வேறு நிறுவனங்களில் உள்ள அ.தி.மு.க.வினரை வெளியேற்றி இளைஞர்களுக்கு வேலையை வழங்குவோம் என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இப்பவே ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டாங்களே என்று மக்கள் அதிர்ந்துபோய் உள்ளனர்.