டிஸ்யூ பேப்பருக்கு பதில் தேசியக் கொடி! அவமதிப்பு செய்த தேனி இளைஞருக்கு நேர்ந்த பரிதாப நிலை!

தேனியில் தேசியக் கொடியை அவமதித்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர் ஜோதிபாசு. 40 வயதாகும் இவர், போடி நகர பொறுப்பாளராக உள்ளார். சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதற்கு, எதிர்ப்பு தெரிவித்து, மோடி கழிவறையில் அமர்ந்திருப்பது போலவும், தேசியக் கொடியை டிஸ்யூ பேப்பர் போலவும் சித்தரித்து கார்ட்டூன் வரைந்து.

இவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதே கார்ட்டூனை  வாட்ஸ்ஆப்பில் பலருக்கும் அனுப்பியுள்ளார். இதன்பேரில், போடி நகர பாஜக பொறுப்பாளர்  தண்டபாணி போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து தேசியக் கொடியை அவமதித்ததாகக் கூறி, வழக்கு பதிந்த போலீசார், ஜோதிபாசுவை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.இச்சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.