பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் சென்னை வந்திருந்த நேரம் தமிழ் மொழியை மிகவும் பாராட்டி பேசினார்.
பொதிகை அதிகாரி சஸ்பெண்ட்? மோடி நிகழ்ச்சியை ஒளிபரப்பாததுதான் காரணமா?

அதோடு தமிழ்நாட்டின் இட்லி, வடை, தோசை, சாம்பார் போன்றவை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று பேசினார்.
ஐ.ஐ.டி.யில் மோடி பேசியது சென்னை பொதிகையில் நேரடியாக ஏன் ஒளிபரப்பு செய்யப்படவில்லை என்று பிரதமர் அலுவலகத்தில் இருந்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகருக்கு விளக்கம் கேட்டதாக ஒரு செய்தி பரவியது.
அதன் காரணமாகவோ என்னவோ, சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி உதவி இயக்குனராக இருப்பவர் வசுமதி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடி கலந்து கொண்ட ஐ.ஐ.டி நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்ய தவறியதால் நடவடிக்கை என்று தகவல் கூறப்பட்டாலும், அவருக்கு வழங்கப்பட்ட சஸ்பென்ட் உத்தரவில் அதுபோன்ற தகவல் எதுவும் இல்லை. அதனால் இது துறை ரீதியிலான நடவடிக்கையா அல்லது மோடி விவகாரமா என்பது இனிமேல்தான் தெரியவரும்.