மோர் பானையில் தொடங்கி கலவரத்தில் முடிந்த பொன்பரப்பி சம்பவம்! சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்!

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், பொன்பரப்பி கலவரம் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர் சமூக நல பிரிவு தலைவர் பாலு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது,


மோர் பானையில் தொடங்கி மோதலில் முடிந்த பொன்பரப்பி கலவரம் - பாமக சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டது

விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பாட்டாளி மக்கள் கட்சியை குறி வைத்தே தொடர்ந்து அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார்.

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொன்பரப்பி எனும் ஊரில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோவில் அருகே ( வாக்கு பதிவு மையத்தில் இருந்து 60 மீட்டர் ) இருந்து விடுதலை சிறுத்தை கட்சியினர் காலை 11 மணி அளவில் வாக்களிக்க வருபவர்களை மோர் தருகிறோம் என்று கூறி பனையை காட்டி பிரச்சாரம் செய்து உள்ளனர்.அதே வாக்கு சாவடிக்கு மாம்பலம் சின்னத்திற்கு வாக்களிக்க சென்ற வீர பாண்டியன் என்பவரை ஊனமுற்றோர் என்று பாராமல் வழிமறித்து விசிக தாக்கியுள்ளது.

இதை தட்டி கேட்க சென்ற பாமக கட்சியினரை விசிக தொண்டர்கள் கல்லால் அடித்து உள்ளார்கள்,அவர்களை விரட்டவே பமாகவை சேர்ந்த தொண்டர்கள் பொன்பரப்பு ஊருக்குள் துரத்தி சென்று விரட்டி உள்ளனர்.அந்த வீடியோவை தான் விசிக திட்டமிட்டு பரப்பி வருகிறது.

பொன்பரப்பி சம்பவம் ஏற்பட்ட உடனே காவல்துறைக்கு தகவல் கிடைக்க அவர்கள் 15 நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு வந்தனர்.அதனை படம்பிடித்த போது தான் தனியார் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் கலைவானன் என்பவர் விசிக கட்சியினரால் தக்கப்பட்டுள்ளார்.

தர்மபுரி இளவரசன் சம்பவம் முதல்  பொன்பரப்பி சம்பவம் வரை விடுதலை சிறுத்தை கட்சியினர், பாட்டாளி மக்கள் கட்சியை குறிவைத்து பொய் குற்றச்சாட்டுகளை பரப்பி வருகின்றனர்.

வெற்றி வாய்ப்பு இருந்தும் மோதல் ஏற்பட கூடாது என்ற காரணத்திற்காக மட்டுமே சிதம்பரம் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடவில்லை,கேட்டு இருந்தால் கூட்டணி கட்சி இடம் கொடுத்து இருப்பார்கள் ஆனால் எந்த ஒரு அசம்பவிதமும் நடைபெற கூடாது என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே சிதம்பரம் மக்களவை தொகுதி விட்டு கொடுக்கப்பட்டது.

ஸ்டாலினை சந்திக்கும் வரை மௌனம் காத்த திருமாவளன் ஸ்டாலினை சந்தித்த பின்பு போராட்டம் என்று அறிவிக்கிறார்.இதனை வைத்து பார்க்கும் பொழுது பின்புலத்தில் ஸ்டாலின் இருந்து கொண்டு ஆளும் அரசுக்கு கலங்கம் விளைவிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தான் இந்த திட்டமிட்ட செயல்கள் நடைபெற்று வருகிறது.

திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சி நவீன தீண்டாமை, அரசியல் தீண்டாமையுடன் தான் திமுக விசிக-வை நடத்திவருகிறது. அதேநேரத்தில் அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே ஸ்டாலின் விசிகாவை வைத்து இரட்டை வேடம் போட்டு வருகிறார்.

ஸ்டாலின் பின்புலம் மற்றும் அரசியல் ஆதாயம் வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்க்காக மட்டும் தான் விடுதலை சிறுத்தை கட்சகியின் தலைவர் திருமாவளவன் நாளை தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த உள்ளார்.

பொன்பரப்பியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 13 நபர்களில் அமமுகவை சேர்ந்த மூன்று நபர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர், இதன் மூலம் பாமகவின் பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்க்காக மட்டுமே இந்த கலவரம் தூண்டப்பட்டுள்ளது.

பாப்பிரெட்டிப்பட்டியில் மறுவாக்கு பதிவு நடைபெற்றால் பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கும். இவ்வாறு அவர் கூறினார்.