பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள்! கொங்கு மண்டலம் சூப்பர் சாதனை!

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் கொங்கு மண்டல மாணவ,மாணவிகள் சூப்பர் சாதனை படைத்துள்ளனர்.


பிளஸ் ஒன் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. அதன்படி பிளஸ் 1 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 95 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 96.5 விழுக்காடு மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். பிளஸ் 1 தேர்வில் 93.3 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்

மாணவர்களை விட மாணவிகள் 3.2 விழுக்காடு அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 1 தேர்வில் மாவட்ட அளவில் 98 விழுக்காடு தேர்ச்சியுடன் ஈரோடு முதலிடம் பிடித்துள்ளது. 97.9 விழுக்காடு தேர்ச்சியுடன் திருப்பூர் 2ம் இடமும் 97.6 விழுக்காடு தேர்ச்சியுடன் கோவை 3ம் இடமும் பிடித்துள்ளன. 

இதன் மூலம் முதல் மூன்று இடங்களையும் கொங்கு மண்டலத்தை சேர்ந்த மாவட்டங்களே பெற்றுள்ளன. இதற்கு முன்பு எந்த மண்டலமும் இப்படி ஒரு சாதனையை படைத்தது இல்லை. 

அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளில் 90.6 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளில் 96.9 விழுக்காட்டினர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளில் 99.1 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, என்ற இணையதளங்களில் முடிவுகளை மாணவ, மாணவிகள் தெரிந்து கொள்ளலாம். எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் ரிசல்ட் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.