40 வயது நடிகை என்னுடன் உறவில் இருந்தார்! கருத்து வேறுபாட்டால் கற்பழித்ததாக கூறுகிறார்! கதறும் பிரபல டாக்டர்!

மும்பை: ''என்னிடம் அந்த நடிகை ஏமாற்றி பணம் பறிக்க முயன்றார்,'' என, பிரபல பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் தெரிவித்துள்ளார்.


மும்பையை சேர்ந்தவர் விரல் தேசாய். பிரபல பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணரான இவர் மீது நடிகை ஒருவர் சமீபத்தில் சாண்டாக்ரஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை பெற வந்தபோது, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதன்பேரில், அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பிரபல டாக்டர் என்பதால், இந்த செக்ஸ் புகார் அவரின் நன்மதிப்பை குறைப்பதாக உள்ளது.  

இந்நிலையில், குறிப்பிட்ட 40 வயது நடிகை தன்னிடம் இருந்து பணம் பறிக்க முயன்றதே இந்த பிரச்னைக்கு காரணம் என்று விரல் தேசாயின் கிளினிக் சார்பாக, சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சொந்த குடும்ப பிரச்சனையால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள அந்த நடிகை எதாவது பொய் சொல்லி பணம் பறிக்க திட்டமிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.  

இதுதவிர, போலீஸ் நடவடிக்கையில் இருந்து தப்பிக்கும் வகையில் விரல் தேசாய் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ''நடிகைக்கும், எனக்கும் இடையே நல்ல புரிதலுடன் கூடிய உறவு இருந்தது. ஆனால், அதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, என் மீது வீணான புகார் சுமத்தி, பணம் பறிக்க முயற்சிக்கிறார்,'' எனக் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.