விவசாயிகள் என்றால் பெரிய மயிரா..? ஹைட்ரோ கார்பனுக்கு ஆதரவா வந்தாச்சு சட்டம்!

ஹைட்ரோ கார்பன் திட்டம் அறிவிக்கப்பட்டதில் இருந்து டெல்டா மாவட்ட விவசாயிகள் தினம் ஒரு போராட்டம், நாளுக்கொரு ஆர்ப்பாட்டம் என்று நடத்திவருகிறார்கள்.


ஆனால், விவசாயிகளை நம் தமிழக அரசு மட்டுமின்றி மத்திய அரசும் கொஞ்சம்கூட மதிக்கவில்லை என்பதற்கான உதாரணம்தான், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு ஆதரவாக மத்திய அரசு நிறைவேற்றியுள்ள சட்டம்.

அந்த வகையில் ஆட்சிக்கு ஆதரவாக இயங்கிவரும் வேதாந்தா நிறுவனத்துக்கு உதவ வேண்டும் என்கிற நோக்கத்தில் டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளையும் அதற்காக விவசாய நிலங்களில் குழாய் பதிக்கவும் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதிக்க வாங்கத் தேவையில்லை என கூறி அதனை அரசிதழிலில் வெளியிட்டுள்ளது. 

சுற்றுச்சூழல் அனுமதி வாங்கவேண்டும் என்பதை ஒழித்துக்கட்டியது மட்டுமின்றி, விவசாயிகளிடமோ மக்களிடமோ இதுகுறித்து எந்தக் கருத்தும் கேட்கத் தேவையில்லை எனவும் கூறியுள்ளது. இதனைப் பார்க்கும்போது கடந்த இரண்டாண்டுகளக பெரிய அளவில் போராடி வரும் டெல்டா பகுதி விவசாயிகளை இந்த அரசு மயிராகக் கூட மதிக்கவில்லை என்றுதானே அர்த்தம்.

மத்திய அரசு என்ன திட்டம் கொண்டுவந்தாலும், அதனை அப்படியே நிறைவேற்றுவதுதான் தமிழக அரசின் ஒரே குறிக்கோள். ஆனால், இந்தத் திட்டத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற விடமாட்டோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்து இருப்பது கண் துடைப்பு என்பதை சொல்லவே வேண்டியதில்லை.

ஆம், மத்திய அரசின் திட்டத்தை நாம் எப்படி தடுக்கமுடியும் என்று அமைதியாக வேடிக்கைதான் பார்க்கப் போகிறார்கள். விவசாயத்தை விட்டுட்டு எங்கேயாவது போய் சேருங்கள் என்பதைத்தான் சொல்கிறது மத்திய அரசு. எதிர்க்கட்சிகள் அறிக்கை விடுவதுடன் கடமை முடிந்துவிட்டது என்று அமைதியாகக் கூடாது.