பன்றிக் குட்டிகளுக்கு உதட்டில் ஆழ்ந்த முத்தம்..! போட்டி போட்டுக் கொண்டு கொடுக்கும் அழகிகள்..! காரணம் இது தான்..!

பன்றிகளுக்கு ஓட்டப் பந்தயம் வைத்து அதில் வெற்றி பெறும் பன்றிகளுக்கு பெண்கள் முத்தம் கொடுக்கும் ருசிகர நிகழ்வு நடைபெற்றுள்ளது.


குட்டிப் பன்றிகளுக்கு ஓட்டப் பந்தயம் வைக்கப்பட்டது. இதில் வெற்றி பெற்ற பன்றிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் பன்றிகள் உற்சாகமாக ஓடிவந்த காட்சிகள் பார்ப்போரை வியக்க வைத்தது. பரிசுகள் மட்டுமின்றி ஒருபடி மேலே போய் வெற்றி பெற்ற பன்றிகளுக்கு வெளிநாட்டை சேர்ந்த அழகான பெண்கள் முத்தம் கொடுக்கிறார்கள்.

முத்தம் என்றால் சாதாரணமாக கன்னத்தில் கொடுப்பது அல்ல. வாயோடு வாய் வைத்து ஆங்கில திரைப்பட ஸ்டைலில், மேலைநாட்டு கலாச்சாரத்தில் கொடுக்கிறார்கள். சில பன்றிக் குட்டிகள் சமத்தாக முத்தத்தை வாங்கிக் கொண்டன.

சில பன்றிகள் முத்தம் கொடுக்கும் பெண்கள் பிடிக்கவில்லை என்பதாலோ என்னவோ திமிறி நிராகரிக்கின்றன. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளவாசிகளை ஆக்கிரமித்துள்ளன. முத்தம் எப்படி இருந்திருக்கும் என கற்பனை எல்லாம் செய்து பார்க்காதீர்கள். நேற்று சாப்பிட்டது இன்று வாந்தியாக வந்து சேரும்.