திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயலில் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த புகாரில் உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாடி ரூமில் மாணவியுடன் அரைகுறை உடையுடன் ஆசிரியர்..! உள்ளே இருந்து வந்த விபரீத சப்தம்! திறந்து பார்த்து அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்!

திருமுல்லைவாயலில் வசித்து வரும் உடற்கல்வி ஆசிரியர் ராஜேஷ் திருநின்றவூரில் ஒரு தனியார் பள்ளியில் பணிபுரிகிறார். இவர் குடியிருக்கும் வீட்டின் தரைதளத்தில் மாணவி ஒருவர் 12ம் வகுப்பு படித்து வருகிறார். ஆசிரியர் பணிபுரியும் பள்ளியில்தான் மாணவியும் படித்து வந்துள்ளார். அந்த 12ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி மயக்கி உள்ளார் ஆசிரியர்.
பின்னர் மாணவி நெருங்கி பழக அவரை அழைத்துக் கொண்டு, சினிமா, பீச் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார். இதை பயன்படுத்தி பல முறை பாலியல் சீண்டல்களும் அளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெற்றோருடன் இருந்த மாணவியை மாடிக்கு வருமாறு அழைத்துள்ளார். முதலில் மாணவி மறுக்க பின்னர் எதோ பேசி வரவழைத்துள்ளார் ஆசிரியர்.
பின்னர் அங்கு மாணவியை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மாணவி கூச்சல் போடவே அங்கு வந்த பெற்றோர் கதவைத் தட்டியுள்ளனர். மாணவி கதவைத் திறந்து வெளியில் வந்தபோது இருவரும் அரை நிர்வாண கோலத்தில் இருந்துள்ளனர். பின்னர் ஆசிரியர் ராஜேஷ் மாணவியின் பெற்றோர் மற்றும் பொதுமக்களால் சரமாரியாக தாக்கப்பட்டார். பின்னர் போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் போலீஸ் விசாரணை நடத்தி ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.