நோய் பாதிப்பு இருக்கும்போது உடற்பயிற்சி செய்யலாமா?

உடற்பயிற்சி செய்வதன் காரணமாக நோய் தடுக்கும் ஆற்றல் அதிகரிக்கிறது என்பதை அனைவரும் அறிவோம். சோம்பலுடன் இருந்தவர்களைவிட தினமும் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு 50 சதவிகிதம் வரையிலும் பல்வேறு நோய்களும் தாக்கும் வாய்ப்பு குறைகிறது என்பதை பல்வேறு ஆய்வுகள் நிரூபித்து உள்ளன.


வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவது சகஜம்தான். ஆனால் தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு 65 வயது வரையிலும் நோய் எதிர்ப்பு சக்தி சிறந்த முறையில் செயலாற்றுது உறுதி செய்யப்பட்டுள்ளது.நோய் பாதிப்பு இருக்கும்போது கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடாது என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தடுமன், காய்ச்சல், ஆஸ்துமா போன்ற தாக்குதல் இருக்கும்போது சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு அதன் பிறகு வழமையான உடற்பயிற்சிக்குத் திரும்புவதே நல்லதுநோய் காரணமாக உடல் சோர்வடைந்து இருக்கும்போது உடற்பயிற்சி செய்வதால் மேலும் சோர்வு அடையக்கூடும். நோயினை அது தீவிரப்படுத்திவிடும். அதனால் உங்கள் உடல் சோர்வாக இருக்கும்போது ஓய்வு கொடுப்பதே நல்லது.