சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி வீராங்கனையை கொலை செய்ய முயன்றதாக புகார் எழுந்துள்ளது.
நள்ளிரவு..! ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கிய பக்கத்து வீட்டு நபர்! கழுத்தை நெறித்ததால் கதறிய மாறுத்திறனாளி வீராங்கனை! சிவகங்கை பரபரப்பு!

நாகர்கோவில் காட்டாத்துறையைச் சேர்ந்த சுபஜா 2009-ல் ஏற்பட்ட ரயில் விபத்தில் தனது இரண்டு கால்களை இழந்தார். மாற்றுத்திறனாளியான சுபஜா வீட்டில் ஆதரவு இல்லாமல் நெருங்கிய தோழி உதவியால் சிவகங்கை சக்கந்தி பகுதியில் வசித்து வருகிறார்.
குறைகளை மனுவாக எழுத தெரியாத மக்களுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு மனு எழுதிக் கொடுத்து அன்றாட வாழ்க்கையை குறைந்த வருமானத்தில் ஓட்டிவருகிறார்.
மேலும் விடாமுயற்சி காரணமாக கூடைப்பந்து, குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளும் பெற்று வருகிறார். இந்நிலையில், சுபஜா தங்கியிருக்கும் வாடகை வீட்டு புகுந்த நபர், அவரைக் கொலை செய்ய முயன்றதாக சிவகங்கை நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சம்பவத்தன்று பக்கத்து வீட்டில் வசிக்கும் சேகர் என்பவர், எனது வீட்டின் ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கியதாக தெரிவித்தார். நான் கத்தியவுடன் என் கழுத்தை நெரித்து கொல்ல முயன்றதாகவும் உடனே அக்கம் பக்கத்தினர் வந்து காப்பாற்றியதாகவும் தெரிவித்தார்.
தன்னை எதற்காக சேகர் கொல்ல திட்டமிட்டார் என தெரிய வில்லை என்றும் நான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதால் காவல்துறை கைது செய்து விடும் என்ற பயத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதுபோல நடிக்கிறார் என்றும் குற்றம்சாட்டினார் மாற்றுத் திறனாளி வீராங்கனை சுபஜா. கால்களை இழந்த சுபஜாவுக்கு வீட்டு உறவினர்கள் ஆதரவு அளித்திருந்தால் இதுபோன்ற கயவர்களின் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்