வயது வெறும் 26 தான்..! திடீரென மரணம் அடைந்த பிரபல நடிகரின் தங்கை! அதிர வைக்கும் காரணம்!

ரஜினிகாந்த்தின் பேட்ட படத்தின் வில்லனின் தங்கை புற்றுநோய் பாதிப்பு காரணமாக காலமானார்.


மும்பை திரையுலகில் 1999ம் ஆண்டு முதல் தனக்கென முத்திரை பதித்து பல்வேறு கதாபாத்திரங்களில் வாழ்ந்து வருபவர் நவாஸுதீன். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் வில்லனாக மிரட்டிய நவாஸுதீன் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். 

இவரின் தங்கை ஷியாமாவுக்கு 18 வயது முதலே மார்பக புற்றுநோய் பாதிப்பு இருந்து வந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக நோய் பாதிப்பால் உயிருக்கு போராடி வந்த ஷியாமா ஷியாமா நேற்று முன்தினம் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அமெரிக்காவில், நோ லேன்ட்ஸ் மேன் படப்பிடிப்பில் இருந்த நவாஸுதீனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக அவர் படப்பிடிப்பை ரத்த செய்து விட்டு புறப்பட்டுள்ளார். அவர் வந்தவுடன் உத்தரப்பிரதேச மாநிலம் புத்தானாவில் இறுதிச்சடங்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நவாஸுதீன் சித்திக் கடந்த ஆண்டு அக்டோபர் 13ல் ஷியாமாவின் 25வது பிறந்த நாளை முன்னிட்டு தங்கையுடன் இருக்கும் போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.  

அதில் இன்று 25வது பிறந்த நாள் கொண்டாடும் தங்கைக்கு மார்பக புற்றுநோய் இருப்பது அவளது 18வது வயதில் கண்டுபிடிக்கப்பட்டது. அவருடைய மனோதைரியமும் துணிச்சலும்தான் அவரை அனைத்து சிரமங்களுக்கு எதிராகவும் நிற்க வைத்துள்ளது என பதிவிட்டிருந்தார். ஷியாமாவின் மறைவு நவாஸுதீன் சித்திக்கின் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஷியாமாவின் மறைவுக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்