பெட்ரோல் போட பெண்களின் உள்ளாடை அணிந்து வரும் ஆண்கள்! அசர வைக்கும் காரணம்..!

மாஸ்கோ: நீச்சல் உடையில் வந்தால் பெட்ரோல் இலவசம் எனக் கூறியதால் பங்க் ஒன்றில் ஆண்கள் பிகினியில் வரிசை கட்டி நிற்கிறார்கள்.


ரஷ்யாவின் சமாரா பகுதியில் உள்ள ஓல்வி பெட்ரோல் நிலையத்தில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி, நீச்சல் உடையில் வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவச பெட்ரோல் எனக் கூறப்பட்டது.

இதைக் கேள்விப்பட்டதும் நிறைய பெண்கள் பிகினி அணிந்து பெட்ரோல் பங்க் வருவார்கள் என எதிர்பார்த்த நிலையில், ஒரு மாற்றம் நிகழ்ந்ததும். உள்ளூர் ஆண்கள் பலரும் பிகினி அணிந்து வரிசை கட்டி வர தொடங்கினர். எந்த கூச்சமும் இன்றி ஆண்கள் பிகினியில் வந்ததோடு, அதனை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் #BikiniDress என்ற ஹேஷ்டேக்கில் பகிர அது உடனடியாக ரஷ்யா முழுக்க டிரெண்டிங் ஆனது.  

பிகினி மட்டுமல்ல, சில ஆண்கள் ஹீல்ஸ் அணிந்து ஒய்யாரமாக நடந்துவந்து பெட்ரோல் பங்க் ஊழியர்களை வியப்பில் ஆழ்த்தினர் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.