முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விட்டவர் கைது - காரணம் கேட்டா சிரிச்சே வயிறு புண்ணாயிடும்!

சென்னையில் முதலமைச்சரின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார்.


இதையடுத்து சென்னையில் உள்ள முதலமைச்சரின் வீட்டிற்கு பாதுகாப்பு அதிகாரிகள் சென்றுள்ளனர். இந்நிலையில் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம அவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள சேலையூர் பராசக்தி நகரைச் சேர்ந்தவர் வினோத்குமார், இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக அவரது மனைவி வினோத்குமார் குறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் வினோத்குமாரை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த வினோத் குமார் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.அப்போது திடீரென காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு முதலமைச்சரின் வீட்டில் தான் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உடனே முதலமைச்சரின் வீட்டிற்கு தகுந்த பாதுகாப்பு அதிகாரிகளை அனுப்பி உள்ளனர். இந்நிலையில் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய நபர் யார் என விசாரணை நடத்தினர்

இதையடுத்து அவர் பேசிய செல்போன் சிக்னலை வைத்து அவர் எந்தப் பகுதியிலிருந்து பேசினார் என்பதை கண்டறிந்த போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தியபோது வினோத் குமார் என்பவரை கைது செய்துள்ளனர். இது போலீசார் அவரிடம் விசாரிக்கையில் தனது மனைவி மீது உள்ள கோபத்தால் தான் இவ்வாறு செய்து விட்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார் இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.