என்ன மருத்துவம் செய்தாலும், மீண்டும் மீண்டும் பருக்கள் வருகிறதா? இதோ நிரந்தர தீர்வு!

முகத்தில் பருக்கள் வருவதற்கு பல கரணங்கள் உள்ளன. ஆனால் அவை வந்தால் முகத்தின் அழகே கெடுகின்றன. அதனால் பொருட்களை போக்குவதற்கு இயற்கையான சில வீட்டு வைத்தியங்கள்.


எலுமிச்சை சாற்றை இரவில் படுக்கும் போது சிறிது நீரில் கலந்து, பருக்களின் மேல் தடவி மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இது பருக்களில் உள்ள பஸ்ஸை நீக்கி அதில் உள்ள பாக்டீரியாவைக் கொல்ல உதவும்.

கற்றாழை ஜெல்லை தினமும் இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி மசாஜ் செய்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி ஒரு மாதம் தொடர்ந்து பின்பற்றினால், முகம் பருக்களின்றி பிரகாசமாக இருப்பதைக் காணலாம்.

விளக்கெண்ணெயை சிறிது வெதுவெதுப்பாக சூடேற்றி, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். ஒருவேளை விளக்கெண்ணெய் சற்று அடர்த்தியாக இருப்பது போல் இருந்தால், ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து கலந்து பயன்படுத்துங்கள்.