ஈரான் அரசுக்கு எதிராகத் திரும்பிய மக்கள்..! உலகப்போர் அச்சம் போயே போச்சு!

ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் இருந்து, உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி கிளம்பிய விமானம், திடீரென விபத்துக்குள்ளாகி 176 பேரும் ஒட்டுமொத்தமாக மரணம் அடைந்தனர்.


சாதாரண விபத்தாக இருக்க வாய்ப்பு இல்லை என்றே கருதப்பட்டது. இந்த சதிவேலையை செய்தது அமெரிக்காவா அல்லது ஈரானா என்று பல்வேறு குழப்பங்கள், சந்தேகங்கள் இருந்துவந்தன. இதுவரை அமைதியாக இருந்த ஈரான் மீதுதான் பல நாடுகள் குற்ற்ம் சாட்டின. அதற்கேற்ப கருப்புப்ப்ட்டியை கொடுப்பதற்கும் தயங்கியது.

இந்த நிலையில், தவறுதலாக அந்த விமாத்தை சுட்டு வீழ்த்திவிட்டதாக ஈரான் அரசு வருத்தம் தெரிவித்துள்ளது. இதையெடுத்து சொந்த நாட்டிலேயே மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. ஈரான் அரசு பொய் சொல்லிவிட்டது என்று கல்லூரி மாணவர்கள் ரோட்டில் இறங்கி போராடி வருகிறார்கள்.

ஈரான் மீது போர் தொடுக்க, ட்ரம்புக்கு இருந்த அதிகாரத்தை அமெரிக்க செனட் சபை பறித்துவிட்டது. அதனால் ஈரான் போருக்கு அமெரிக்க மக்களிடம் ஆதரவு இல்லை. இப்போது ஈரானிலும் போருக்கு ஆதரவான நிலை இல்லை.

பொய் சொல்லும் அரசுக்கு ஆதரவு தரமாட்டோம் என்று மக்களும், பொதுமக்களும் வீதியில் இறங்கி போராடுவதால், இப்போதைக்கு உலகப்போர் பற்றிய அச்சம் யாருக்கும் தேவையில்லை.