பூமியில் இருந்து வானை எட்டும் வகையில் புழுதிச் சுழல்! பொள்ளாச்சியில் பரபரப்பு!

பொள்ளாச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வானை முட்டும் அளவிற்கு புழுதி சுழல் ஏற்பட்டது.


இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வியப்பில் உள்ளனர்.பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலக மைதானத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புழுதிச் சுழல் ஏற்பட்டது. பூமியின் வெப்பநிலை அதிகமாக உள்ளதால் இந்த மாதிரியான சுழல் ஏற்படுவது வழக்கமானதாகும்.

அந்த மாதிரியான சுழல் ஏற்படுவது மழை வருவதற்கான அறிகுறி எனவும் கூறுவர். இதைத் தொடர்ந்து இதே சாலையில் திங்கட்கிழமையும் வானை முட்டும் அளவிற்கு புழுதிச் சுழல் உருவானது. இதுபோன்று இதுவரை ஏற்பட்டதில்லை என்பதால் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள பொதுமக்கள் அதனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

வறண்ட பகுதியில் மட்டுமே இந்த புழுதிச் சுழல் ஏற்படும். இதன் ஆயுட்காலம் சில நிமிடங்கள் மட்டுமே. இந்த சுழலால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு மலேசியாவிலும் இதுபோன்ற சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த சுழலின் புகைப்படங்கள் சில தினங்களுக்கு முன்பு இணையதளத்தில் பரவி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.