மீண்டும் போராட்டத்தில் குதிக்கும் மக்கள் அதிகாரம்! டென்ஷன் போலீஸ்!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்குப் பிறகு இத்தனை நாட்களும் அமைதியாக இருந்த மக்கள் அதிகாரம் அமைப்பு மீண்டும் களம் இறங்க தயாராகி வருகிறது.


தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்குப் பிறகு இத்தனை நாட்களும் அமைதியாக இருந்த  மக்கள் அதிகாரம் அமைப்பு மீண்டும் களம் இறங்க தயாராகி வருகிறது.

தமிழகத்தை அழிக்க வரும் எட்டுவழிச்சாலை, ஹைட்ரோ கார்பன், அணுக்கழிவு உள்ளிட்ட திட்டங்களை எதிர்த்து தமிழகத்தை நாசமாக்காதே என்ற முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் நாடுதழுவிய அளவில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

மக்கள் மத்தியில் இத்தகைய அழிவுத் திட்டங்களை அம்பலப்படுத்தும் மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது பல்வேறு வழக்குகள் போட்டு கருத்துரிமையை முடக்குகிறது போலீஸ். இதனைக் கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் எதிர்வரும் ஜூலை 17, 2019 அன்று சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

இப்படி ஒரு போராட்டம் நடந்துவிடக்கூடாது என்பதுதான் போலீஸின் எண்ணமாக இருக்கிறது. அதனால் அடுத்தடுத்து கைதுகள் அரங்கேறும் என தெரிகிறது.