தலித் கர்ப்பிணி பெண்ணுக்கு கோவிலுக்குள் அடி உதை! நெஞ்சை பதற வைக்கும் காரணம்!

ஐதராபாத்: தலித் என்ற காரணத்தால் கர்ப்பிணி என்றும் பாராமல் பஞ்சாயத்து தலைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் குவிந்து வருகிறது.


தெலுங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள துர்காகுடா கிராமத்தில்பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் பவித்ரா. இவர் மடிகா சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். அந்த சமூகத்தை, தெலுங்கானா மாநிலத்தினர் பட்டியலினமாக கருதுகிறார்கள். இதுதவிர, பவித்ரா டிஆர்எஸ் கட்சியில் உறுப்பினராகவும் உள்ளார்.

இந்நிலையில், உள்ளூர் கோயிலில் நடைபெற்ற விழாவின்போது, கோயில் தெய்வத்திற்கு, பவித்ரா தேங்காய் காணிக்கை செய்திருக்கிறார்.  
ஆனால், இதனை ரெட்டி சமூகத்தைச் சேர்ந்த அவரது அரசியல் விரோதிகள் எதிர்த்துள்ளனர். இதன்போது, வாக்குவாதம் முற்றி, பவித்ராவை அவர்கள் அடித்து உதைத்துள்ளனர்.

கர்ப்பிணியாக உள்ள பவித்ராவை, ஜாதியை காரணம் காட்டி தாக்கியதற்கு, பல தரப்பிலும் கண்டனம் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என்று பவித்ரா குறிப்பிட்டுள்ளார்.