உடல் முழுவதும் கொப்பளம் போன்ற கட்டிகள்..! பார்த்தாலே விரட்டும் கிராம மக்கள்! காரணம் அதிர வைக்கும் நோய்!

புவனேஷ்வர்: உடல் முழுக்க கட்டிகளுடன், இந்திய நபர் ஒருவர் வேதனையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.


ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் 65 வயதான திவாகர் பிசோயி. இவருக்கு, தலை முதல் கால் வரை அனைத்து இடங்களிலும் கட்டியாகக் காணப்படுகிறது. 15 ஆண்டுகளுக்கு முன் இத்தகைய பாதிப்பு முதலில் ஏற்பட்டுள்ளது. கண் இமைகளில் கூட கட்டிகள் உள்ளன. குறிப்பாக, இடது காலில் மட்டும் ஒரு கட்டி 25 கிலோ அளவுக்கு மிகப்பெரியதாக உள்ளது. இதனால், வெளியில் எங்கும் நடமாட முடியாமல், வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்.  

ஐ படத்தில் வரும் விக்ரம்போல மிகவும் விகாரமான தோற்றத்தில் உள்ள இவரைக் கண்டு உள்ளூர் மக்கள் பீதியடைந்துள்ளனர். எனவே, அவசர உதவிக்குக் கூட ஆளில்லாமல் தனிமையில் வாடி வரும் திவாகர், தன்னை எல்லோரும் தெருநாயைப் போல நடத்துவதாக, வேதனை தெரிவிக்கிறார்.  

இது மரபணு ரீதியான பாதிப்பாகும். நரம்புகளில் ஏற்படும் கோளாறு காரணமாக, படிப்படியாக, உடல் முழுக்க கட்டிகள் உண்டாகும். இதற்கு Neurofibromatosis என்று பெயர். வாடகை வீட்டில்தான் வசிக்கிறார் என்பதால், அவரை வீட்டை விட்டு காலி செய்யும்படி, வீட்டின் உரிமையாளர்கள் மிரட்டி வருகின்றனர்.

உடல் பாதிப்பை பார்த்து, யாரும் வேலை தரவும் மறுப்பதால், சாப்பாட்டிற்கு மிகவும் கஷ்டப்படுகிறார். தனது சுற்றுப்புற பகுதிகளில் நல்ல மருத்துவமனை கிடையாது என்பதால், ஒரு நல்ல மருத்துவமனையில் சிகிச்சை பெற உதவும்படி, திவாகர் தன்னைச் சந்தித்த ஊடகக்குழுவினரிடம்  வேண்டுகோள் வைத்துள்ளார்.