கொரோனாவுக்குப் பயந்து சென்னையில் இருந்து தப்பித்துச்செல்லும் பொதுமக்கள். இது இரண்டாம் பெயர்வு..?

லாக்டவுன், வேலையிழப்பு, உயிர் பயம் காரணமாக சென்னையைவிட்டு, சொந்த ஊருக்குத் தப்பிச்செல்பவர்கள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இது குறித்து, பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா எழுதியிருக்கும் பதிவு இது.


சென்னை மாநகரத்தில் வரலாற்றில் இரண்டாவது முறையாக மிகப்பெரிய இடப்பெயர்வு நடந்து வருகிறது. இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டிஷ் அரசு எச்சரிக்கையின் பேரின் பேரில் பலரும் மூட்டை முடிச்சுகளுடன் இடப்பெயர்வு செய்தனர். சென்னையில் இயங்கி வந்த பல ஸ்டூடியோக்கள் இக்காலத்தில்தான் இடம்பெயர்ந்தன சரஸ்வதி சவுண்ட் சர்வீஸ் என சென்னையில் இயங்கி வந்த ஏவி.எம். ஸ்டூடியோ கூட காரைக்குடிக்கு இடம்பெயர்ந்து, பிற்பாடுதான் சென்னை திரும்பி வட பழனியில் இடம் வாங்கி ஏவி.எம் ஆனது. அதன்பிறகு .இப்போதுதான் பலர் கூட்டம் கூட்டமாக பலர் சொந்த ஊர்களுக்கு திரும்பிக்கொண்டிருப்பதாக தகவல் வருகிறது . 

சென்னை மட்டுமல்லாமால் உலகம் முழுக்க பெரு நகரங்கள் இப்போது உயிர்வாழ தகுதியற்ற நிலைக்கு சென்று விட்டன . இது எதிர் பார்த்த ஒன்றுதான் . எழுபதுகளில் தொழில்மயமாதல் காலத்தில் துவங்கிய நகரமயமாதல் கார்பரேட் யுகத்தில் மிக துரிதமான வேகத்தில் நடைபெற்றது. உலகம் முழுக்க குறிப்பிட்ட நகரங்கள் நோக்கி மக்கள் கூடிக்கொண்டேயிருந்தால் நீர் காற்று போன்ற உயிராதார விஷயங்களுக்கு இயற்கையும் என்ன செய்யும், இயற்கை மனிதனை கைவிடத்துவங்கிவிட்டது காந்த சக்தி இழந்த இரும்புத்துகள் போல மனிதர்கள் கிராமங்களுக்கு திரும்புகின்றனர்.

வேளாண்யுகம் தொழில்யுகம் என மாறி இப்போது கார்பரேட் யுகமும் முடிவுக்கு வருகிறது அடுத்து உருவாகப்போகும் யுகம் என்ன? மனித குலத்தை காப்பற்றப்போகும் தத்துவம் எது . எந்த அச்சில் இனி இந்த உலகம் சுழலும்? இன்னும் ஒரு வருடம் தொடர்ந்தால் கோயில்கள் வழிபாட்டுத்தலங்கள் தொடர்ந்து மூடியிருந்தால் கடவுள்கள் மதங்கள் நிலை என்ன ஆகும் . இயற்கை வழி வாழ்க்கை என மனிதன் நீர் நிலைகள் நோக்கி திரும்புவதால் வாழ்க்கை பொருளாதாரம் சமூக நிலை என்னவாகும்?  

 எதிர்கால சமூகம் எப்படி இயங்கும் என சமீபகாலமாக எழுதியும் சிந்தித்தும் பேசியும் வந்த சேபியன் ஹோமோடியுஸ்ஸ் ஆகிய நூல்களை எழுதிய யுவ நோவ ஹராரி எனும் இஸ்ரேலிய சிந்த்னையாளரே கொரோனா வுக்கு ப்பிறகு என்ன ஆகும் என்பதை கணிக்க முடியவில்லை என கையை விரிக்கிறார் அவர் சமீபத்தில் இந்தியா டுடேவுக்கு கொடுத்த பேட்டியில் ஒரு அருமையனா விஷய்த்தை கூறியிருக்கிறார் அதுதான் மிக முகியம் . கொரோனா வைரஸை கூட நாம் கட்டுப்படுத்திவிடலாம் .

ஆனால் இந்த நாடுகளுக்குகிடையேயான் வெறுப்பை கட்டுப்படுத்துவதான் இப்போது பிரச்னையே நமக்கு சவலாக இருப்பதே இவைதான் . அமெரிக்க சீனாவையும் சீனா அமெரிக்காவையும் இந்தியா இஸ்லாமியரையும் இஸ்லாமியர்கள் யூதர்களையும் யூதர்கள் இஸ்லாமியரையும் வெறுப்புதுதான் மிக முக்கிய பர்ச்னை . இந்த வெறுப்புணர்ச்சி நின்றால் மனிதகுலம் எதிர் நோக்கும் பெரிய ஆபத்திலிருந்து விலக முடியும் இல்லாவிட்டால் அடுத்த இந்த உலகம் என்னவாகும் என்பதை யாராலும் தீர்மானிக்க முடியாது என கூறியிருக்கிறார் .

உண்மை தான் நாடுகள் மதங்கள் தம் வெறுப்பிலிருந்து விலகட்டும் நாமும் நம்மை சுற்றியிருக்கும் வெறுப்பை முதலில் விலக்கத்துவங்குவோம் . உதாரணத்துக்கு முக நூலிலிருந்து கூட துவக்கலாம் கருத்து ரீதியாக என்ன முரண் இருந்தாலும் வெறுப்பை துறந்து பழகும் வாய்ப்பை உருவாக்குவோம் . இந்த இக்கட்டான சூழலில் நாமனைவரும் ஒருவரோடு ஒருவர் அனைத்து தடைகளையும் கடந்து கைகளை பற்றிக்கொள்வோம். உலகம் இன்று இதை தான் ஒவ்வொரு தனிமனிதனிடமும் எதிர்பார்க்கிறது