நடன மங்கையை அலேக்காக தூக்கிச் சென்ற 3 பேர்! பாலியல் உறவு வைத்து கதற வைத்த கொடூரம்!

பெண் நடனக் கலைஞரை கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


ஹரியானாவைச் சேர்ந்த பெண் நடனக் கலைஞர் டெல்லியின் கஜூரி காஸ் என்ற இடத்துக்கு  ஒரு நடன நிகழ்ச்சியை நடத்துவதற்காக வந்தார். கடந்த 5 நாட்களுக்கு முன் இங்குள்ள காஷ்மீரி கேட் பகுதிக்கு பேருந்தில் வந்து இறங்கிய  பெண் நடனக் கலைஞரிடம் 3 பேர் வந்து தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

அவர் தங்க இருக்கும் வீட்டுக்கு அழைத்து  செல்ல வந்திருப்பதாக அவர்கள் கூறியதை நம்பி அவர் அவர்களுடன் சென்றதாகவும், அவர்கள் அந்தப் பெண்ணை ஒரு காரில் அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் அந்தப் பெண்ணை வீட்டுக்கு அழைத்துச் செல்லாமல் ஒதுக்குப் புறமான ஒரு வயல் வெளிக்கு கொண்டு சென்றதாகவும் அங்கு அவர்கள் மூவரும் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயப் படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் செல்ஃபோனை எடுத்துக்கொண்டு அவர்கள் தப்பியோடியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான அந்தப் பெண்ணின் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸார் லோகேஷ், ஓம், ரிஷிகேஷ் என்ற மூன்று பேரை கைது செய்துள்ளனர்.