8ம் வகுப்பு படித்த நீங்க தலைவராகலாம்! படிக்காத நாங்க வேட்பாளராக கூடாதா? கமலிடம் டென்ஷனாகும் தொண்டர்கள்!

படிக்காத நீங்க மட்டும் தலைவராக இருக்கலாம் நாங்க வேட்பாளராக கூடாதா என்று கமலிடம் அவரது கட்சியினரே டென்சனாகி வருகிறார்கள்


இந்தத் தேர்தலில் மக்கள் நீதி மையத்தில் போட்டியிடுபவர்களில் எத்தனை பேர் டாக்டர்கள், வழக்கறிஞர்கள் என்று கமல்ஹாசன் பட்டியல் போட்டார். அதாவது படித்தவர்கள், அறிவாளிகள்தான் எங்கள் கட்சியில் நிற்கிறார்கள் என்று சொன்னார்.

இதைக் கண்டு அவரது கட்சித்தொண்டர்கள் செம கடுப்பில் இருக்கிறார்கள். அப்படியென்றால் விருப்ப மனு கொடுக்க வரும்போதே சொல்லியிருக்க வேண்டும். எங்கள் பணத்தை எல்லாம் வாங்கிவிட்டு, அதன்பிறகு இப்படி சொல்வது என்ன அர்த்தம் என்று டென்ஷனாகிறார்கள்.

அதுதவிர, கட்சித் தலைவர் கமல்ஹாசனே படிக்கலை, பட்டம் வாங்கலை, ஆனா வேட்பாளர் எல்லாம் அப்படியிருக்கணும்னு சொன்னா  என்ன அர்த்தம். கட்சிக்குத் தொண்டரும் படிச்சிருக்கணும்னு சொல்லியிருக்கலாமே.

ஓட்டுப் போட மட்டும் எங்களை மாதிரி படிக்காதவங்க வேணும், ஆனா பதவிக்கும், போட்டி போடவும் படிச்சவங்களா என்று நிர்வாகிகள் கேட்கும் கேள்விகள் அர்த்தமுள்ளதாகவே தெரிகிறது. இதற்கு கமல் ஏதாச்சும் பதில் சொல்வாரா அல்லது கோவை சரளா சண்டைக்கு வருவாரா...