ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இளம் பெண் ஒரு நாட்டுக்கே கல்வி அமைச்சரானார்..! கேட்போரை நெகிழ வைக்கும் நிகழ்வு!

பாரிஸ்: ஆடு மேய்த்த பெண், பிரான்ஸ் நாட்டின் அமைச்சராக உருவெடுத்துள்ளார்.


கதைகளில் வருவதைப் போல இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மொராக்கோ நாட்டின் எல்லையோரம் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர் Najat Vallaud Belkacem. மிகவும் வறுமையில் உழன்ற இவரது குடும்பம் ஆடு மேய்க்கும் வேலை செய்து வந்துள்ளது. Najat Vallaud Belkacem ஆடு மேய்தது வந்த நிலையில், வேறு வழியின்றி, அவரது 5வயதில் குடும்பத்தினருடன் பிரான்ஸ்க்கு இடம்பெயர்ந்தார். பிரான்ஸ் வந்து சேர்ந்ததும் Najat பள்ளிக்கூடம் செல்லும் வாய்ப்பை பெற்றார்.

அதன்படி பள்ளிக்கூடம் சேர்ந்த அவர் கடின உழைப்பை செலுத்தி படித்து முன்னேறினார். அரசியல் பாடம் படித்து, முதுகலை பட்டம் பெற்ற Najat, 2004ம் ஆண்டு பாரிஸ் உள்ளூர் கவுன்சில் தேர்தலில் போட்டியிட்டு, கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார். படிப்படியாக அரசியலில் தீவிர ஆர்வம் காட்டிய அவர், 2012ம் ஆண்டு பிரான்ஸ் அரசின் மகளிர் உரிமைகளுக்கான அமைச்சர் பதவியை எட்டிப் பிடித்தார். 2014ம் ஆண்டு கல்வி அமைச்சர் பதவியை பெற்றார்.   

புலம்பெயர்ந்தவர் என அவர் மீது விமர்சனம் தெரிவிக்கப்பட்டாலும் அவை அனைத்தையும் சமாளித்து, எதிர்நீச்சல் போட்டு பிரான்ஸ் அரசியலில் செல்வாக்குடன் திகழ்கிறார் Najat. பெண்களால் எதுவும் சாதிக்க முடியாது எனச் சொல்வோருக்கு இவரது கதை ஒரு சரியான எடுத்துக்காட்டு என்றால் அது மிகையல்ல.