குழந்தை பிரசவித்த மகளை அடித்தே கொலை செய்த தந்தை! பதற வைக்கும் காரணம்!

ஆந்திராவில் வேறு சமூக வாலிபருடன் காதல் திருமணம் செய்துக் கொண்ட மகளைப் பெற்றோர் அடித்தே கொன்று உடலை கால்வாயில் வீசிவிட்டு குழந்தையுடன் கம்பி நீட்டியது பெரும் அதிர்வை ஏற்ப்படுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலம் உசிரிபெண்ட் பகுதியைச் சேர்ந்த கேசவலூ மற்றும் ஹேமாவதி இருவரும் காதலித்து வந்த நிலையில், கேசவலூ வேற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் ஹேமாவின் பெற்றோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இதனால் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்னதாக வீட்டை விட்டு வெளியேறிய ஹேமா, கேசவலுவை திருமணம் செய்துக்கொண்டு வெளியூரில் தங்கிக் குடித்தனம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் ஹேமாவிற்க்கு ஆண்குழந்தை பிறக்க ஆசையாக தனது பெற்றோரைக்காண கேசவலூ நேற்று சொந்த ஊருக்கு ஆட்டோவில் திரும்பி வந்துக்கொண்டிருந்த போது, தகவல் அறிந்த ஹேமாவின் குடும்பத்தினர் அங்கு வந்து, ஆட்டோவை மறித்து கேசவலூவ்வை சரமாரியாக தாக்கியதுடன், மகள் ஹேமாவையும் பாரபட்சம் பார்க்காமல் அடித்துள்ளனர்.

குழந்தைப்பெற்ற பெண் என்பதால் அடியைத் தாங்க முடியாமல் ஹேமா சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார்.அவரது உடலை அங்கிருந்த கால்வாயில் வீசிவிட்டு குழந்தையுடன் தப்பினர். இதனை அடுத்து ஆத்திரமடைந்த கேசவலூ வின் குடும்பத்தினர், ஹேமாவின் வீட்டை சூறையாடியதுடன் தீயிட்டு கொழுத்தினர், போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.