என் மகள்கள் நித்யானந்தா ஆசிரமத்தில் கற்பழிக்கப்படுகிறார்கள்..! கதறும் தாய் - தந்தை..! அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!

நித்தியானந்தா ஆசிரமத்தில் பெண் குழந்தைகளை அடிமைப் போல் வைத்திருப்பது மட்டுமல்லாமல் பாலியல் கொடுமையும் நடப்பதாக 3 மகள்களின் தந்தை கண்ணீர் பேட்டி அளித்துள்ளார்.


குஜராத்தை சேர்ந்த ஜனார்த்தன சர்மா, நித்தியானந்தா மீது அகமதாபாத் போலீசில் புகார் அளித்தார். தனது 3 மகள்களை பெங்களூருவில் உள்ள நித்யானந்தா கல்வி நிலையத்தில் சேர்த்திருந்ததாகவும், அவர்கள் அகமதாபாத்திற்கு கடத்தப்பட்டு சித்ரவதை செய்ப்படுபவதாகவும் குறிப்பிட்டு இருந்தார். 

இதையடுத்து நித்யானந்தா ஆசிரமத்தில் சோதனை நடத்திய போலீசார் ஜனார்த்தன சர்மாவின் 3வது மகளை மீட்டனர். ஆனால் மற்ற 2 மகள்களை மீட்க முடியவில்லை. இந்நிலையில் நித்யானந்தா மீது குழந்தை கடத்தல் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை தேடி வருகிறார்கள்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஜனார்த்தன சர்மா மற்றும் அவரது மனைவி ஆகியோர் நித்யானந்தா ஆசிரமத்தில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை நடந்து இருப்பதாக கூறினார்.

இதில் எங்கள் குழந்தைகளை போல் பல குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அழைத் சென்று நித்யானந்தாவின் புகழ் பாட வைப்பார்கள். நித்தியானந்தாவின் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு தலா ரூ.15 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. என் மகளை வெளிநாட்டுக்கு அழைத்து செல்ல அவர்கள் முயற்சித்தார்கள் அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.

அங்கு படிக்கும் குழந்தைகளுக்கு சி.பி.எஸ்.இ. ஐ.சி.எஸ். கல்வி சொல்லித் தருவதாக பொய் கூறுகின்றனர். இந்நிலையில் தங்களது மகள்கள் தன்னிடம் தொடர்பு கொண்டு எப்படியாவது அழைத்து செல்லுமாறு கெஞ்சினார்கள். ஆனால் குழந்தைகளிடம் தனிப்பட்ட முறையில் பேச வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தார்கள்.

இதனால் வேதனை அடைந்த நாங்கள் அகமதாபாத் போலீசில் புகார் அளித்தோம். அதன்பிறகு பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு இரண்டு குழந்தைகளுடன் பேச அனுமதித்தனர். என்னுடைய பெண் குழந்தைகள் மூன்று முறை பாலிய பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறினார். மேலும் நித்யானந்தா ஆசிரமத்தில் சிறுமிகளுக்கு பாலியல் வன்முறைகள் நடந்திருப்பதும் தெரிய வந்தது.

இதுதொடர்பாக புகார் அளித்துள்ளேன். என் மகள்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் என்னுடைய மகள்கள் வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டுள்ளனர். எப்படியாவது மீட்டுத் தரவேண்டும் என பேட்டி அளித்தார்.