நெருங்கிய திருமணம்! மாயமான மணப்பெண்! தேடிச் சென்ற மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமணத்திற்கு ஒரு சில நாட்களே உள்ள நிலையில் காதலனுடன் சென்று திருமணம் செய்து கொண்டார் 20 வயது பெண்.


நாகர்கோவில் அடுத்த கோட்டார் போலீஸ் எல்லையில் 20 வயது பெண் ஒருர் தான் ஒருவரை காதலிப்பதாகவும் அவருடன் வாழவே விரும்புவதாகவும் தனது பெற்றோரிடம் தெரிவித்து வந்துள்ளார். ஆனால் இதற்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்காமல் அதே ஊரை சேர்ந்த ஒரு இளைஞருக்கு மகளை நிச்சயம் செய்து கொடுத்துள்ளனர்.

பின்னர் மண்டபம், சாப்பாடு, கச்சேரி, துணிமணிகள், நகைகள் என ஆசை ஆசையாக மகளின் திருமணத்திற்கான ஏற்பாடுகளை பெற்றோர் கவனித்து வந்த நிலையில் அவர்களின் ஆசையில் மண் அள்ளிப் போடுவது போல் அவர்களின் மகள் திடீரென மாயமானாள்.

திருமணத்திற்கு ஒரு சில நாட்களே உள்ள நிலையில் பெற்றோர் நிச்சயித்த பையனுடன் வாழ விரும்பாமல் பெண் தன் காதலனுடன் ஓட்டம் பிடித்தார். திடீரென பெண் மாயமனதால் காவல்துறை உதவியுடன் அந்த பெண்ணை பெற்றோர் தேட ஆரம்பித்தனர்.

அப்போது சுசீந்திரத்தை சேர்ந்த ஒரு இளைஞருடன் அந்த பெண் அடிக்கடி போனில் பேசியதை கண்டுபிடித்த போலீசார் அந்த பெண்ணை தொடர்பு கொண்டனர். உடனடியாக வீடு திரும்புமாறும் காதலனையே சேர்த்து வைப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதை நம்ப மறுத்த அந்த பெண் பெற்றோர் தங்களை சேர்த்து வைக்க மாட்டார்கள் எனவும் தன்னுடைய விருப்பத்தை மீறி திருமண ஏற்பாடுகள் செய்ததால் தான் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் கூறினார்.

மேலும் தான் ஒரு மேஜர் என்பதால் தனக்குத் தேவையான முடிவுகள் எடுக்க உரிமை உள்ளதாகவும் அதனால் தான் விரும்பியபடியே தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டதாகவும் தெரிவித்தார் அந்தப் பெண். மேலும் தன்னை தேடும் பணியில் ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். 

இதுகுறித்து உறவினர்கள் கூறியபோது இன்னொரு பையனுடன் நிச்சயிக்க முயற்சித்த போதே அந்தப் பெண் சென்றிருந்தால் திருமணம் வரை இந்த ஏற்பாடுகள் சென்று இரண்டு குடும்பங்களுக்கும் அவமானமும் பண விரயமும் ஏற்பட்டிருக்காது என தங்களது ஆதங்கத்தை தெரிவித்தனர்.

தாய், தந்தை தான் தெய்வம் என லட்சோப லட்சம் பெண்கள் பேஸ்புக்கிலும் வாட்சப்பிலும் கதை, கட்டுரை, கவிதை எழுதுகிறார்கள். நிஜ வாழ்க்கையில் தெய்வத்தை அழ வைக்கிறார்கள் என்று வாட்சப் பார்வர்டு செய்தி நினைவுக்கு வருகிறது.