கொரோனா ஊரடங்கு நேரத்தில் பரவை முனியம்மா திடீர் மரணம்..! காரணம் இது தான்..!

நாட்டுப்புற பாடகியாக இருந்து நடிகையான பரவை முனியம்மா உடல் நலக்குறைவால் காலமானார்.


தூள் படத்தில் வரும் சிங்கம் போல நடந்து வர்றான் பாடலின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பேசப்பட்டவர் பரவை முனியம்மா. தொடர்ந்து நடிகர் விவேக்குடன் இணைந்து பல்வேறு காமெடி ரோல்களில் பரவை முனியம்மா நடித்து வந்தார். வடிவேலுடன் இணைந்தும் காமெடி வேடங்களில் நடித்தார்.

ஒரு கட்டத்தில் உடல் நலக்குறைவால் தொடர்ந்து நடிக்க முடியாத சூழலில் தனது சொந்த ஊரான பரவை சென்றார். அங்கு இருந்தபடியே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். சில மாதங்களுக்கு முன்னர் பரவை முனியம்மா உடல் மோசமான நிலையில் நடிகர் சங்கத்தில் இருந்து உதவி செய்யப்பட்டது.

இந்த நிலையில் திடீரென பரவை முனியம்மா காலமாகியுள்ளார். வயது மூப்பு மற்றும் உடல் நிலை சரியில்லாததே அவரது மரணத்திற்கு காரணமாகியுள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பரவை முனியம்மா இறந்திருப்பது அவரது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்யுள்ளது.