தர்மபுரியில் களமிறங்கும் பாப்பிரெட்டிபட்டி பழனியப்பன்! மரண பீதியில் அன்புமணி!

தர்மபுரியில் தினகரன் கட்சியின் வேட்பாளராக பழனியப்பன் களமிறங்குவது அன்புமணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.


 கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அன்புமணி. ஆனால் சட்டப்பேரவைத் தேர்தலில் அன்புமணி பாப்பிரெட்டிப்பட்டியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

பாப்பிரெட்டிப்பட்டியில் அன்புமணியை தோற்கடித்தவர் அதிமுகவின் பழனியப்பன். தற்போது தினகரன் கட்சியில் இருக்கும் பழனியப்பன் தான் நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரி தொகுதியில் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார்.

அதாவது தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளராக அன்புமணி போட்டியிடுவதால் அவருக்கு எதிராக பலமான வேட்பாளர் தேவை என்று பழனியப்பனை களமிறக்கியுள்ளார் டிடிவி தினகரன்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் பணிகளை மிக நுணுக்கமாக அன்புமணி மேற்கொண்டும் அவற்றையெல்லாம் முறியடித்து பழனியப்பன் வெற்றி வாகை சூடினார். அன்புமணியை ஒப்பிடும்போது பழனியப்பனுக்கு தேர்தல் அரசியல் அத்துப்படி.

தர்மபுரி தொகுதியில் கூட அன்புமணிக்கு அன்னியம் தான். ஆனால் பழனியப்பன் தர்மபுரி தொகுதிக்கு மிகவும் பரிச்சயமானவர். 

எனவே கடந்த முறையை போல் அன்புமணியால் இந்த முறை தர்மபுரி தொகுதியில் எளிதாக வெற்றி பெற முடியாது என்று அடித்துக்கூறுகின்றனர் தினகரன். மேலும் அன்புமணியை தோற்கடித்து தன்னுடைய வல்லமையை நிரூபிக்க வேண்டும் என்று தற்போது பக்காவாக ஸ்கெட்ச் போட்டு களமிறங்கியுள்ளார் ஆம் பழனியப்பன்.

இதனால் பிரச்சாரம் தீவிரம் அடையும் முன்பே தர்மபுரி தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.