டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் சிக்கி சின்னாபின்னமான பன்னீரின் மகன் ரவீந்திரநாத்!

தொலைக்காட்சியில் பேட்டி என்றதும் முதன்முறையாக எம்.பி. ஆகியிருக்கும் பன்னீர்செல்வத்தின் மகன், டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு தொலைபேசி மூலம் பேட்டி கொடுக்க ஒப்புக்கொண்டார்.


ஆனால், வட நாட்டவர்கள் வில்லங்கமான ஆட்கள் என்பது தெரியாமல் போனதுதான் விபரீதம். தமிழகமே தண்ணீர் பஞ்சத்தில் வாடிக்கொண்டு இருக்கும்போது, முதல்வர் பழனிசாமி வீடு, துணை முதல்வர் பன்னீர்செல்வம் வீடு மற்றும் அமைச்சர்கள் வீடுகளுக்கு தினமும் மூன்று லாரி தண்ணீர் கொண்டுசெல்லப்படுகிறதே என்று கேள்வி எழுப்பப்பட்டது.

முதலில் அப்படியெல்லாம் இல்லை என்று  மிகவும் சாதாரணமாக பேசத் தொடங்கினார் ரவீந்திரநாத். ஆனால், நெறியாளர் மீண்டும் துல்லியமான புள்ளிவிபரத்துடன் கேள்விகளைக் கேட்க, நான் டெல்லியில் இருப்பதால் என்னால் சரியான நிலைமையை கணிக்க முடியவில்லை என்று சொல்லி தப்பிக்கப் பார்த்தார். அதற்கும் சரியான பதிலடி கொடுத்தார் நெறியாளர்.

தமிழகத்தின் பிரதிநிதியாக இருந்துகொண்டு, இதுகூட தெரியாமல் இருக்கலாமா என்று கேள்வி எழுப்பியதும், பின்னங்கால் பிடறியில்பட, தொலைபேசி இணைப்பில் இருந்து ஓடியே போனார். ஒழுங்கா, நாடாளுமன்றம் போனோமா, நாஷ்டா சாப்பிட்டோமா, மோடியை புகழ்ந்து ரெண்டு வார்த்தை பேசினோமான்னு இல்லாம, பேட்டிக்கு வந்தா இப்படித்தான்.

உஷாரா இருந்துக்கோப்பா ரவி, இல்லைன்னா அப்பா மாதிரி வாயில மிக்சரை போட்டுக்கோ...