பாரதியார் வேடத்தில் பன்னீர்! அமெரிக்க அலப்பறைகள் ஆரம்பம்!

எடப்பாடி வெளிநாடு சுற்றுப்பயணம் போய்வந்ததுமே, பன்னீருக்கும் அப்படியொரு ஆசை வந்துவிட்டது.


அதனால் வீட்டுவசதிவாரியத்தில் செயல்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ளவும் தொழில்முதலீடுகளை ஈர்ப்பதற்கும் என்ற காரணம் சொல்லி அமெரிக்காவுக்குக் கிளம்பிவிட்டார்.

அனைத்து அமைச்சர்களும் கட்சி நிர்வாகிகளும் நமது அம்மா பத்திரிகையில் முதல்வருக்குக் கொடுத்தது போலவே பன்னீருக்கும் விளம்பரம் கொடுத்துவிட்டார்கள். இந்த நிலையில் அமெரிக்காவில் சென்று இறங்கிய பன்னீருக்கு செம வரவேற்பு கொடுத்து அசத்திவிட்டார்களாம், தமிழ் சங்கத்தினர்.

எடப்பாடி வெளிநாட்டுக்குப் போனதும் முழுவதுமாக பேன்ட், கோட் என்று மாறிவிட்டார். ஆனால், பன்னீர் வெளிநாட்டுக்குப் போனாலும் பேன்ட் போடமாட்டேன் என்று அடம் பிடித்தாராம். ஆனாலும் குளிர் அதிகம் என்பதால், சட்டைக்கு மேலே மட்டும் கோட் போட்டுக்கொள்ள வைத்தார்களாம்.

அப்படியே பாரதியார் மாதிரி இருக்கீங்க என்று பலரும் சொல்ல, பன்னீருக்கு சந்தோஷமோ சந்தோஷம். நல்லவேளை பாரதி செத்துப்போயிட்டார்.