முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரையிலும், ஆட்சி அதிகாரத்தை வைத்து எதுவும் சாதிக்க முடியாது என்பதில் ஓ.பி.எஸ். மிகவும் தெளிவாக இருக்கிறார்.
இபிஎஸ் ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும்! ஆதரவாளர்களிடம் ஆரூடம் சொன்ன ஓபிஎஸ்!
அதனால், அந்திம காலத்தில் ஆட்சி இருக்கும்போதே கட்சியை மட்டும் கைப்பற்றிக்கொள்ள ஆசைப்பட்டு காய் நகர்த்துகிறார். இதை தெரிந்துகொண்ட இ.பி.எஸ்., கட்சிக்குள்ளும் பன்னீருக்கு இருக்கும் கொஞ்சநஞ்ச சொந்தபந்தங்களையும் வெட்டிவிட முயற்சி எடுத்துவருகிறார் என்பதுதான் ஹாட்டஸ்ட் நிலவரம்.
இருவருக்கும் இடையில் இருக்கும் பஞ்சாயத்து அதிவிரைவில் அம்பலத்துக்கு வரும் என்கிறார்கள். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை வரவழைத்து கூட்டம் நடத்தினால், எசகுபிசகாக மாறிவிடும் என்பதால்தான் இ.பி.எஸ். வீட்டில் வரிசையாக நிர்வாகிகளை கூப்பிட்டு பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
முதலில் பன்னீரையும் தன் வீட்டுக்கு வரவழைத்து பேச்சுவார்த்தையைத் தொடங்கினார். ஆனால், இந்த விவகாரத்தில் பன்னீர்செல்வத்துக்கு அத்தனை நம்பிக்கை இல்லை என்பதாலே, சட்டென்று கிளம்பிவிட்டார். அதன்பிறகு பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்களுடன் ஒரு மீட்டிங் நடத்தியிருக்கிறார்.
அவரது ஆதரவாளர்கள் என்றதும் கட்சிக்காரர்கள் என்று அதிர்ந்துவிடக் கூடாது. அவரது இரண்டு பிள்ளைகள், தம்பி, அண்ணன் போன்றவர்களுடன் கூட்டம் போட்டு பேசியிருக்கிறார். அப்போது, ‘எந்த நேரத்திலும் அ.தி.மு.க. அரசுக்கு ஆபத்து வந்துவிடலாம். அதனால் அதற்குள் கட்சியை முழுமையாக கைப்பற்றிவிட வேண்டும். இல்லையென்றால், அ.தி.மு.க. கட்சியையும் எடப்பாடி பன்னீர்செல்வம் ஸ்வாகா செய்துவிடுவார்’ என்று பேசியிருக்கிறார்.
இந்த விவகாரத்திற்காக தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை தனித்தனியே சந்தித்துப் பேச இருக்கிறாராம் பன்னீர். அவர்களுடைய ஒட்டுமொத்த ஆதரவும் கிடைத்ததும் மீண்டும் தர்மயுத்தம் இருக்குமாம். ஆமாம், இதெல்லாம் நம்புற மாதிரியாஇருக்கு என்று கேட்காதீர்கள். எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான் என்ற நம்பிக்கைதானாம்.