அக்கானு கூப்பிட்டு லவ் புரபோஸ் பண்றாங்க..! பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு கிடைத்த விபரீத அனுபவம்!

வெள்ளித்திரை நட்சத்திரங்களுக்கு ரசிகர்கள் கூடிய காலம் மாறி தற்போது சின்னத்திரை நட்சத்திரங்களுக்கும் மக்கள் மத்தியில் மவுசு கூட தொடங்கி உள்ளது.


அந்த வகையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் மிக நல்ல நிலையில் ஓடக்கூடிய சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் . இதில் முல்லை ஆக அறிமுகமாகி தமிழக மாமியார்களுக்கு ஆல் டைம் செல்லமானார் நடிகை சித்திரா, அதிலும் அவர் சமீபத்தில் மனம் திறந்து பேசிய ஒரு நேர்காணல் மிக வைரல் ஆகி வருகிறது. 

சித்திரா சின்னத்திரைக்கு புதுசான்னு கேட்டா இல்லைங்க, அவர் கிட்டதட்ட 4 ஆண்டுகாலுக்கும் மேலாக சின்னதிரையில் பணியாற்றி வருகிறார். ஆனால் இந்த வருடம் தான் அவருக்கு ஜாக்பாட்டாக அமைந்துள்ளது எனலாம், மேலும் கல்யாணம் குறித்த கேள்விக்கு நிச்சயமாக காதல் திருமணம் தான் என பதில் அளித்தவர். 

அவரது சின்னத்திரை பயணத்தின் போது துவண்டு போன நிலையில் நம்ம பிக்பாஸ் கவின் பண்ண அட்வைஸ் தான் ரொம்ப பிடிச்சிருக்குன்னு ஓபனா சொன்னான்க. அதிலும் கவின்- தான் பல தோல்விகளை, அவமானக்களை கஷ்டங்களை சந்திச்சிருக்கேன் ஆனாலும் கூட அதை மனதளவில் கொண்டு செல்வது இல்லை என கூறியது மனதுக்கு ஆறுதலாக இருந்தது எனவும் பேசியுள்ளார். 

பிக் பாஸ்க்கு அப்புறம் சும்மாவே கவின் பற்றி டிரெண்டாக்கி வரும் அவரது ரசிகர்களுக்கு இப்போ இந்த ஒரு பேட்டி செம்ம குஷியை கொடுத்து இருக்குன்னு சொல்லலாம். மேலும் காதல் பண்ணலாம் என்றால் இதுவரை யாரும் சித்ராவிடம் புரபோஸ் செய்யவில்லையாம். அப்படியே சிலர் ஐ லவ் யூ சொன்னாலும் ஐ லவ் யூ அக்கானு சொல்றாங்களாம்.