சூதாட்ட விடுதியில் இளம் பெண்ணுடன் செக்ஸ் குறும்பு! காங்., எம்எல்ஏ வசமாக சிக்கினார்!

கோவா: பனாஜி எம்எல்ஏ, மேயர் மற்றும் முன்னாள் துணை மேயர் ஆகியோர் செக்ஸ் புகாரில் சிக்கியுள்ளனர்.


கோவா மாநிலம் பனாஜி எம்எல்ஏ அதானாசியோ மான்செரேட், மேயர் உதய் மத்கெய்கர், முன்னாள் துணை மேயர் யாதின் பாரிக் உள்ளிட்டோர் உள்ளூர் கேசினோ விடுதியில் சமீபத்தில் ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது, ஒரு பெண்ணிடம் முறைகேடாக நடந்துகொண்டதாக, 3 பேர் மீதும் புகார் கூறப்படுகிறது.

இதன்பேரில், பாதிக்கப்பட்ட பெண், போலீசில் புகார் அளித்துள்ளார். இதையேற்று, பனாஜி போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுபற்றி எம்எல்ஏ அதானாசியோ கூறுகையில், ''இந்த விவரம் எதுவும் எனக்குத் தெரியாது. இருந்தாலும், என் மீது தவறு எதுவும் இல்லை,'' என்று குறிப்பிட்டார்.

சூதாட்ட விடுதி ஒன்று விதிகளை மீறி கட்டிடம் கட்டியுள்ளது. இதனை அகற்ற அதிகாரிகள் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த பெண் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அந்த பெண்ணிடம் தான் காங்., எம்எல்ஏ அதானாசியோ செக்ஸ் குறும்பு செய்ததாக புகார் எழுந்துள்ளது. ஆனால் இது பாஜக அரசின் திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கை என்று எம்எல்ஏ கூறியுள்ளார்.