தங்கதமிழ்செல்வனை தொடர்ந்து பழனியப்பன்! திமுகவில் இணைய சூப்பர் வியூகம்!

தங்கதமிழ்செல்வனை தொடர்ந்து அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைய பழனியப்பன் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளார்.


அமமுகவில் இருந்து விலக திமுகவில் இணைந்து செந்தில் பாலாஜியும் முன்னாள் அமைச்சர் பழனியப்பனும் நெருங்கிய நண்பர்கள். செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்த போதே பழனியப்பனும் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தலை கருத்தில் கொண்டு அந்த முடிவை தள்ளிப்போட்டார் பழனியப்பன்.

தற்போது தேர்தல் முடிந்து படுதோல்வியை சந்தித்த நிலையில் அமமுகவில் இனி எதிர்காலம் இல்லை என்பதை பழனியப்பன் புரிந்து கொண்டார். இதனால் கட்சி தாவும் முடிவுக்கு அவர் வந்துவிட்டார். மீண்டும் அதிமுகவிற்கு சென்றால் அங்கு செல்வாக்குடன் இருக்கும் கேபி முனுசாமியை எதிர்த்து அரசியல் செய்ய முடியாது என்பதை பழனியப்பன் உணர்ந்து வைத்துள்ளார்.

எனவே திமுகவில் இணைவது தான் சரியான முடிவாக இருக்கும் என்று பழனியப்பன் நினைப்பதாக சொல்கிறார்கள். மேலும் திமுகவில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் சொல்லிக் கொள்ளும்படி பெரிய அளவில் தலைவர்கள் இல்லை. தற்போது தருமபுரி எம்பியாகியுள்ள செந்தில் தான் திமுகவில் அந்த இரண்டு மாவட்டங்களிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

எனவே அவரை சமாளிப்பது எளிது என்று பழனியப்பன் நினைப்பதாகவும் எனவே திமுகவில் இணைய செந்தில்பாலாஜி மூலமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது- இதனை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று தினகரன் வீட்டில் நடைபெற்ற ஆலோசனையில் பழனியப்பன் பங்கேற்கவில்லை. ஆனால் இதற்கு முன்பு மீட்டிங் என்றால் முதல் ஆளாக பழனியப்பன் அங்கு செல்வது வழக்கம்.

எனவே திமுகவில் இணைவதற்கான பேச்சுவார்த்தையின் போது தனது டிமாண்டுகளை வரிசையாக பழனியப்பன் அடுக்கியுள்ளதாகவும் ஸ்டாலின் ஓகே சொன்னால் உடனே இணைப்பு தான் என்கிறார்கள்.