அடிச்சு நொறுக்கிய ஹபீஸ்! தெ.ஆப்ரிக்காவை கதறவிட்ட பாகிஸ்தான்!

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.


டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்களை எடுத்தது.

அந்த அணியின் ஹாசிம் ஆம்லா சிறப்பாக விளையாடி 108 ரன்களை எடுத்தார். வான் டெர் டுசென் 93 ரன்களை எடுத்தார். 267 ரன்கள்  எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 49.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு இலக்கை அடைந்தது.

அந்த அணியின் இமாம் உல் ஹக் அதிகபட்சமாக 86 ரன்களை எடுத்தார். ஹபீஸ் அதிரடியாக விளையாடி 63 பந்துகளில் 71 ரன்களை எடுத்து பாகிஸ்தான் வெற்றிக்கு வழி வகுத்தார். சிறப்பாக விளையாடிய ஹபீஸுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி வரும் 22ம் தேதி டர்பனில் தொடங்கவுள்ளது.