ஒரே ஒரு டாக்டரால் 65 குழந்தைகள்! 150 பேர் எய்ட்ஸ் நோயாளிகளான பயங்கரம்! அதிர வைக்கும் காரணம்!

கராச்சி: எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் தொற்றுநோய்க்கிருமிகளை பரப்பிய புகாரின் பேரில், பாகிஸ்தான் போலீசார் டாக்டர் ஒருவரை பிடித்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட நபரின் பெயர் டாக்டர்.முசாஃபர் காங்காரோ. இவர், கடந்த மாதம், தன்னிடம் சளி, டயரியா உள்ளிட்ட சில நோய்களுக்காக சிகிச்சை பெற வந்த சிலரிடம் வேண்டுமென்றே, எச்ஐவி தொற்றை பரப்பிவிட்டதாக புகார் கூறப்படுகிறது. இதன்பேரில், சில நோயாளிகள் எச்ஐவி பாதிப்பு உள்ளதாகக் கூறி, லார்கனா நகரின் தெற்கே உள்ள அரசு மருத்துவமனைக்கு, சிகிச்சை பெறுவதற்காக, அடுத்தடுத்து ஓடி வந்துள்ளனர். பாகிஸ்தான் சுகாதார அமைச்சகம் சார்பாக, இதுவரை 23,000 எச்ஐவி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

திடீரென கடந்த ஒரு மாதத்தில் மட்டும் எச்ஐவி நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதால், சுகாதாரத் துறை அமைச்சகத்தினர் சந்தேகம் அடைந்து, விசாரணை நடத்தும்படி, போலீசாருக்கு பரிந்துரை செய்தனர். இதன்படி, சந்தேகத்தின் பேரில், டாக்டர். முசாஃபரை போலீசார் பிடித்துள்ளனர். அவர், 65 குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை சுமார் 150 பேருக்கு எச்ஐவி பரப்பியதாகக் கூறப்படுகிறது.

ஆனால், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அப்படி எந்த தவறும் செய்யவில்லை என, அந்த டாக்டர் கூறியிருக்கிறார். இருந்தாலும், உண்மையை வெளியே கொண்டுவரும் நோக்கில், மேலும் 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்கும்படி, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.