பதட்டம் நீடிக்கும் நிலையிலும் பாதை திறக்கிறது பாகிஸ்தான்! குருநானக் ஜெயந்தி பரபரப்பு!

இந்திய பாகிஸ்தான் எல்லையில் உள்ள பாகிஸ்தானில் பிறந்தது சீக்கிய சமயம். பாகிஸ்தானில் பல்லாயிரம் சீக்கியர்கள் வாழ்கின்றனர்


அந்த நாட்டிலும் சீக்கியர்கள் வழிபடும் பல முக்கியமான குருத்வாராக்கள் இருக்கின்றன.அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க குருத்வாராவின் பெயர் குருத்வாரா தர்பார் சாஹிப் கர்தாப்பூர்.இது இந்திய எல்லையில் இருந்து 4 கி.மீ தொலைவில்தான் இருக்கிறது.

நடந்தே போகலாம்.ஆனால்,இந்தியா பாகிஸ்த்தான் பிரிவினை நடந்த காலத்திலிருந்து பேசியும் இது தீரவில்லை. வாஜ்பை பிரதமராக இருந்தபோது முஷ்ரஃபுடன் பேசி 1998ல் கர்தாப்பூர் எல்லையில் ' கர்தார்பூர் காரிடர்' என்கிற ஒரு திட்டம் முன்னெடுக்கப் பட்டது

வழக்கம் போல அது பல முட்டுக்கட்டைகளைச் சந்தித்து வந்தது.இம்ரான்கான் பிரதமரான பிறகு வெங்கையா நாயுடு கர்தார்பூர் காரிடருக்கு அடிக்கல் நட்டார்.இதில் நூற்றுக்கணக்கான அப்பார்ட் மெண்ட்கள் ,நவீன ஷாப்பிங் மால்கள்,உணவகங்கள் இருக்கும்.இதன் வழியே கர்தார்பூர் தர்பார் சாஹிப் குருத்வாராவுக்குப் போகும் இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை.என்பது ஏற்பாடு.

விரைவில் குருநானக்கின் 550வது பிறந்தநாள் வருவதால் சீக்கியர்கள் அதிக ஆளவில் புனிதப் பயணம் மேற்கொள்வர்.இப்போது இந்தியா பாகிஸ்த்தான் இடையே பதட்டம் நிலவுவதால் பாகிஸ்த்தான் அனுமதி தருமா என்கிற சந்தேகம் இருந்துவந்தது.நேற்றைய தினம் ஆப்கானிஸ்தான் நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் சிவில் சொசைட்டி குழுவினர் பாகிஸ்த்தான் வெளியுறவு துறை அமைச்சர் குரேஷியை இஸ்லாமாபாத்தில் சந்தித்தனர்.

அப்போது அவர்களிடையே பேசிய குரேஷி இந்தியா பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழல் இருந்தாலும்,குருநானக் 550 பிறந்தநாளை முன்னொட்டு கர்தார்பூர் தர்பார் சாஹிப் குருத்வாராவுக்கு போகும் வழியை பாகிஸ்த்தான் திறக்கும் என்று அறிவித்து இருக்கிறார். 120 கி.மி பயணம் செய்து லாகூர் சென்று கர்தார்பூர் சென்றகாலம் போய் நடந்தே போகும் காலம் வந்துவிட்டதில் சீக்கியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.