பாகிஸ்தான் அமைச்சருக்கு கரண்ட் ஷாக்! மோடியை விமர்சித்து பேசிய போது ஏற்பட்ட விபரீதம்! வைரல் வீடியோ!

இஸ்லாமாத்: மோடிக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாகிஸ்தான் அமைச்சர் மீது ஷாக் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் பாகிஸ்தான் முழுக்க, இன்று (ஆகஸ்ட் 30) அனுதாபம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, இஸ்லாமாபாத் நகரில் நடைபெற்ற பேரணி ஒன்றில், மத்திய ரயில்வே அமைச்சர் ஷெய்க் ரஷித் அகமது பங்கேற்று பேசினார்.

மோடியை கண்டித்து அவர் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென கையில் வைத்திருந்த மைக்கில் மின்சாரம் பாய்ந்து, அமைச்சருக்கு ஷாக் அடித்தது. இதில், சில நிமிடங்கள் அவர் அதிர்ச்சியடைந்தனர். கூட்டத்தினரும் செய்வதறியாது திகைத்தனர்.

ஒருவழியாக, சுதாரித்துக் கொண்ட அமைச்சர் ஷெய்க், இது மின்சார கோளாறு, மோடியால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறிவிட்டு, தனது பேச்சை தொடர்ந்தார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.