வெளிநாட்டில் கள்ள பாஸ்போர்ட்டில் சிக்கிய தமிழரை காப்பாற்றிய பாகிஸ்தான் ஆசிரியர்! நெகிழ்ச்சி தரும் சம்பவம்!

சிவகுமார் என்கிற தமிழரும்,முகமது உஸ்மான் என்கிற தமிழருக்கும் கள்ளத்தனமாக ஆஸ்திரேலியாவில் குடியேறும் ஆசை வந்தது.


இதைப் பயனபடுத்திக்கொண்ட நூர் முகமது என்கிற டிராவல் ஏஜன்ட் சிவகுமார்,உஸ்மான் இருவரிடமும் தலா 7 லட்ச ரூபாய் பெற்றுக்கொண்டு இவர்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு ரிசார்ட்டில் தங்கவைத்து விட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.அப்போது சிவகுமார் உஸ்மான் இருவரிடமும் தலா 50 திர்ஹாம் மட்டுமே (ரூ:979) இருந்திருக்கிறது.

தாங்கள் கைவிடப்பட்டது அறிந்த இருவரும் பசியும் பட்டினியுமாக வேலை தேடி அலைந்திருக்கிறார்கள்.முறையான அனுமதி இல்லாமல் யு.எ.இயில் தங்கி இருப்பது சட்ட விரோதம் வேறு. இந்த நிலையில் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி இருப்பவர் ஒரு பாகிஸ்தானியர்.

முகமது அசதுல்லா என்கிற அந்த பாகிஸ்தானியருக்கு சொந்தமான ரிசார்ட்டில்தான் சிவகுமாரையும் உஸ்மானையும் தங்கை வைத்து விட்டுப் போயிருந்தான் அவர்களின் மோசடி ஏஜெண்ட்.

விபரம் அறிந்த அசதுல்லா,சிவகுமார் ,உஸ்மான் இருவருக்கும் தனது ரிசார்ட்டிலேயே அவர்களை தங்கவைத்து இருப்பதுடன் இருவருக்கும் அவரே உணவளித்து காப்பாற்றி வருகிறார். குர்ரான் ஆசிரியராகவும் பணியாற்றும் அசுதுல்லா,

தனது இந்திய நண்பர்கள் மூலம் சிவகுமாருக்கும்,உஸ்மானுக்கும் எதிர்காலத்துக்கானமாற்று ஏற்பாடுகளில் மும்முரமாக இருக்கிறார்.சக இந்தியனால் ஏமாற்றப்பட்டு அந்நிய மண்ணில் கைவிடப்பட்ட இந்தியர்களை ஒரு பாகிஸ்தானியர் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் இப்போது வைரலாகிக்கொண்டு இருக்கிறது.